Serial: பொதுவாக சீரியல் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும் ஒரு பொழுதுபோக்கு விஷயமாக தான் பார்க்கப்பட்டு வருகிறது. அதனால் தான் சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி போன்ற சேனல்கள் புதுசு புதுசாக நாடகங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். இதில் ஒரு சேனலில் விளம்பரம் போடும்போது மற்றொரு சேனலில் உள்ள சீரியலை பார்த்து தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
அந்த அளவிற்கு சீரியல் மக்களிடம் போய் ரீச் ஆகி இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு ஹிட் சீரியல் நல்லா போய்க்கொண்டிருக்கும் பட்சத்தில் திடீரென்று அவசரமாக முடிவுக்கு கொண்டு வர முடிவு பண்ணி விட்டார்கள். அந்த வகையில் அந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகளை இன்று எடுத்து முடித்து விட்டார்கள்.
ஆனால் அதற்கு பதிலாக அந்த சீரியலின் இரண்டாம் பாகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்கள். அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகின்ற இதயம் என்கிற சீரியல்தான். இந்த சீரியல் மக்களின் பேவரிட் சீரியலாக கொண்டாடினார்கள்.
இதற்கு முக்கிய காரணம் ஆதி பாரதி மற்றும் தமிழ் மூன்று பேருடைய கதாபாத்திரம் தான். அதிலும் ஆதி பாரதியின் கெமிஸ்ட்ரி மக்களை ரொம்பவே கவர்ந்து இழுத்தது. ஆனால் கதை டிராக் கொஞ்சம் மாறிப்போனதால் மக்கள் சில நெகட்டிவ் கமெண்ட்ஸ்களையும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதை சரி பண்ணும் விதமாக இன்னொரு கேரக்டரை கொண்டு வந்திருந்தார்கள். அந்த வகையில் ஆண்டாள் மற்றும் அழகர் கேரக்டரை வைத்து மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார்கள். தற்போது இந்த ஆண்டாள் அழகர் கேரக்டரை வைத்து தான் இதயம் பார்ட் 2 என்ற சீரியல் வரப்போகிறது.
இந்த சீரியல் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒளிபரப்பு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 650 எபிசோடுக்கு மேல் ஓடி மக்கள் மனதை கவர்ந்து ஹிட் சீரியல் வரிசையில் இடம் பிடித்தது. அப்படிப்பட்ட இந்த சீரியலை முடித்துவிட்டு இதயம் பார்ட் 2 என்ற தொடரில் மறுபடியும் மக்கள் எதிர்பார்த்த கதைகளுடன் கூடிய சீக்கிரத்தில் வரப் போகிறார்கள்.