ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

உலக சினிமாவை அதிரவைத்த 8 ஹாலிவுட் படங்களின் வசூல்.. கிட்ட கூட நெருங்க முடியாத பிளாக்பஸ்டர்ஸ்

வணக்கம் அன்பு நண்பர்களே. நமது சினிமா பேட்டை வலைதளம் வாயிலாக பல்வேறு கட்டுரைகளை கண்டு வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் தலைப்பு இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டிய 8 ஹாலிவுட் திரைப்படங்கள். இந்தியா சமீப காலமாக உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று திரைப்படங்களின் சந்தை.

இந்திய சினிமாவில் ஒரு படத்தை ஓட வைத்தால் அது பல கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் என்பதை தாமதமாகவே புரிந்து கொண்டுள்ளார்கள் ஹாலிவுட்காரர்கள். இதனால் சமீப காலங்களில் ஹாலிவுட் திரைப்படங்களில் எண்ணற்ற இந்திய குறிப்புகளும் இந்திய நடிகர்களும் இடம் பெற்று வருகின்றனர். அதுபோல ஹாலிவுட் திரைப்படங்கள் இந்தியாவில் சக்கை போடு போடுகின்றன. இந்தியாவில் பெரும்பாலும் அதிக வருமானம் ஈட்டும் ஹாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் மார்வெல் நிறுவனமே முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டிக் கொடுத்த முதல் எட்டு திரைப்படங்களை தற்போது பார்க்கலாம்.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 8 :ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் எட்டாம் பாகம் என்றழைக்கப்படும் தீ ஃபேட் ஆப் த ஃப்யூரியஸ் எனும் இத்திரைப்படம் எண்பத்தி ஆறு கோடிகளை இந்தியாவில் குவித்தது. வழக்கம் போல நிறைய கார்கள் கொஞ்சமாய் கதை, வின் டீசல், ராக், ஜேசன் ஸ்டேதம் போன்றோரின் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்தது இந்த திரைப்படம்.

ஜுராசிக் வேர்ல்ட்: 90களில் பட்டையைக் கிளப்பிய டைனோசர்களை கொண்டு பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. அந்த வகையில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ஜுராசிக் வேர்ல்ட் என்னும் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நாம் திரையில் டைனோசர்களை கண்டோம். புதிதாக கட்டப்பட்டு வரும் தீம் பார்க் ஒன்றில் பராமரிக்கப்படும் டைனோசர் ஒன்று எஸ்கேப் ஆனால் என்ன ஆகும் என்பதே பிரதான கதை. வழக்கம் போன்று நல்ல டைனோசர்களை கொண்டு இந்த கெட்ட டைனோசர் எப்படி முடிவிற்கு கொண்டு வருகிறார்கள் என்பதே இப்படத்தின் கதை. மக்களை ஓரளவுக்கு கவர்ந்த இந்த திரைப்படம் 101 கோடிகளை இந்தியாவில் வசூல் செய்தது சாதனை படைத்தது.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 : ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் திரைப்படங்களின் வரிசையில் ஏழாவதாக வெளிவந்த திரைப்படம் தான் இந்த படம். வழக்கம்போல கார்கள் மோதும் சண்டைகளும் சீறிப்பாயும் ரேஸ் கார்களும் நிறைந்த ஒரு பொழுதுபோக்கான திரைப்படம். வின் டீசல், பால் வாக்கர், ராக், ஜேசன் ஸ்டதம் என்று பெரிய தலைகள் பலர் நடித்த இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டுமே 108 கோடிகளை வசூல் செய்தது.

த லயன் கிங் :மீண்டும் ஒரு டிஸ்னியின் திரைப்படம். 90ஸ் கிட்ஸ் களுக்கு மிகவும் பரிட்சயமான த லயன் கிங் திரைப்படம் கார்ட்டூன் இலிருந்து அனிமேஷன் மூலமாக மீண்டும் திரையில் தோன்றியது. கதையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாவிட்டாலும் தங்களுக்கு விருப்பமான கதாபாத்திரங்களை திரையில் பார்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த திரைப்படத்தின் இந்திய வசூல் 158 கோடிகள்.

 தி ஜங்கிள் புக்: இந்த வரிசையில் தற்போது முதன்முறையாக மார்வல் அல்லாத டிஸ்னியின் திரைப்படம் 2016 இல் வெளிவந்த ஜங்கிள் புக். இந்தியர்கள் அனைவருக்கும் பரிச்சயமான ஜங்கிள் புக் நாவலைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையில் விலங்குகளிடம் வளரும் மோக்ளி என்னும் சிறுவனின் கதை. குழந்தைகளை கவர்வதற்காகவே எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் இந்தியாவின் மொத்த வசூல் 188 கோடிகள் ஆகும்.

ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்: இந்தியாவில் வசூல் வேட்டை நடத்திய ஹாலிவுட் திரைப்படங்கள் வரிசையில் ஸ்பைடர்மேன் இல்லாவிட்டால் எப்படி? மூன்றாவது இடத்தை ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் திரைப்படம் பெறுகிறது. ஸ்பைடர் மேன் என்றால் யார் என்பது உலகத்திற்கு தெரிய வர அதற்காக டாக்டர் ஸ்ட்ரெஞ் அவர்களின் ஹெல்ப் தேடி போகிறார் ஸ்பைடர்மேன் எனும் பீட்டர் பேன். அதன் பிறகு நடக்கும் சாகசங்களை இந்த திரைப்படத்தின் கதை. ஸ்பைடர்மேன் ரசிகர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய திரைப்படம். கலெக்சன் 217 கோடிகள்.

 அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்: இரண்டாவது இடத்தில் இருப்பதும் அதே அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் முந்தைய பாகமான இன்ஃபினிட்டி வார். அவெஞ்சர்ஸ் மாபெரும் சக்தி கொண்ட எதிரியான தானோஸ் அவர்களை எதிர்க்க சில உயிர் தியாகங்களும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த உலகத்தை காப்பாற்ற அனைவரும் செய்யும் தியாகத்தை வேகமான திரைக்கதை கொண்டு அமைத்தால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியாவில் இந்த படம் 275 கோடிகளுக்கு மேல் வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அவெஞ்சர்ஸ் எண்டு கேம்: மார்வல் நிறுவனத்தின் சார்பாக வெளிவந்த கடைசி அவெஞ்சர்ஸ் திரைப்படம். இந்த திரைப்படத்தில் தானோஸ் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து உலகத்தை காப்பாற்ற எஞ்சியிருக்கும் அவெஞ்சர்ஸ் அனைவரும் ஒன்றாக சேரும் கதை. இந்த படத்தில் தானோஸ் அவர்களின் சதித் திட்டங்களை எப்படி அவெஞ்சர்ஸ் முறியடித்தனர் என்பதை நேர்த்தியான திரைக்கதை மூலம் கூறியிருந்தனர். இந்தப் படம் இந்தியாவில் மாபெரும் 373 கோடி வசூலித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.

2015ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் ஹாலிவுட் திரைப்படங்கள் மிகப்பெரும் வசூல் மழை பொழிந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அவர்களது படம் தரமானதாகவும், அற்புதமான கிராபிக்ஸ் கொண்டதாகவும், பல்வேறு இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்டது எல்லாம் காரணமாக சொல்லலாம். ஆனபோதும் இத்திரைப்படங்கள் அதிரடி சாகசங்களும் நம்பும்படியான வகையில் திரைக்கதை அமைத்தது தான் வெற்றிக்கு காரணம் என்பது பல்வேறு தரப்பு மக்களின் கருத்தாக இருக்கின்றது.

Trending News