வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பத்தாண்டுகளாக மக்களை மிரள விட்ட 2 இயக்குனர்கள்.. ஒரே ஐடியா ஆனால் பல கோடி லாபம்

சினிமாவை பொருத்தவரை அனைத்து இயக்குனர்களும் ஒரே மாதிரியான படங்களை அடுத்தடுத்து இயக்குவதில்லை. இந்த முறை காமெடி என்றால் அடுத்தமுறை காதல் என அவர்களின் கற்பனை திறனுக்கேற்ப மாற்றி கொண்டே செல்வார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த பத்து ஆண்டுகளாக ஒரே மாதிரி கதையை எடுத்து கல்லா கட்டிய இரண்டு முக்கிய இயக்குனர்கள் உள்ளனர்.

அவர்கள் வேறு யாருமல்ல இயக்குனர்கள் சுந்தர் சி மற்றும் ராகவா லாரன்ஸ் தான். இப்போதுதான் படங்களுக்கு இணையாக வெப் தொடர்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் அப்போதே காஞ்சனா என்ற வெப் தொடரை அடுத்தடுத்த பாகங்கள் என கூறி படமாக இயக்கியவர் தான் ராகவா லாரன்ஸ்.

இதுவரை பேய் படங்களை நாம் அனைவரும் பயத்துடன் தான் பார்த்திருப்போம். ஆனால் பேய் படத்தையும் காமெடி கலந்து சிரித்துக் கொண்டே பார்க்கலாம் என தனது முனி படம் மூலம் நிரூபித்து காட்டியவர் தான் முனி. அப்போது தொடங்கியது தான் இந்த முனி ஃபீவர். அடுத்தடுத்து காஞ்சனா என்ற பெயரில் மூன்று பாகங்களாக ஒரே பேய் கதையை எடுத்து கல்லா கட்டினார் ராகவா லாரன்ஸ்.

இவரை போல தான் இயக்குனர் சுந்தர் சி. முதன் முதலில் அரண்மனை என்ற பேய் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ஒரே பேயை வைத்து மூன்று பாகங்களை இயக்கி இவரும் நன்றாகவே லாபம் பார்த்து விட்டார்.

இந்த இரண்டு வெப் தொடர்களுக்கும் சாரி அதாவது இந்த இரண்டு பேய் படங்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. பேய்களுக்கு உதவி செய்து பழிவாங்கினால் அது காஞ்சனா படம். பழிவாங்கும் பேய்களிடம் இருந்து குடும்பத்தை காப்பாற்றினால் அது அரண்மனை படம் அவ்வளவு தாங்க வித்தாயாசம்.

ஒரே பேய் ஒரே கான்செப்ட்ட மட்டுமே வச்சு இவங்க ரெண்டு பேரும் லாபம் பார்த்திருக்கறது ஆச்சரியம் தான். ஆனா நம்ம ரசிகர்கள் மனநிலைய நினைச்சாதான் ரொம்ப பாவமா இருக்கு.

Trending News