ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 23, 2025

விஜய் டிவி செய்த சூழ்ச்சியால் டேமேஜ் ஆன தொகுப்பாளினி.. பிரியங்காவிற்கு பதிலடி கொடுக்கப் போகும் MM

Vijay Tv: விஜய் டிவியில் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் போதும் ஈசியாக மக்களிடம் பரிச்சயம் ஆகிவிடலாம். அப்படி விஜய் டிவியில் நுழைந்தவர்கள் எத்தனையோ பேர் அவர்களுடைய திறமைகள் மூலம் அடுத்தடுத்து வளர்ந்து தற்போது மக்களிடம் பிரபலமாக இருக்கிறார்கள். இன்னும் சில பேர் எட்டாத உயரத்திற்கு சென்று வெற்றி கொடியை நாட்டி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட விஜய் டிவி சேனலில் பல நிகழ்ச்சிகளில் தன்னுடைய திறமையை காட்டி பிரபலமான ஒரு தொகுப்பாளனி சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் பெயர் டேமேஜ் ஆகியிருக்கிறது. அதை சரி செய்யும் விதமாக தற்போது அவருக்கு இன்னொரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதாவது விஜய் டிவி பொருத்தவரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதை முக்கால்வாசி தொகுத்து வழங்குவது பிரியங்காவாகத்தான் இருக்கும். அதனாலேயே இவருடன் போட்டி போடுவதற்கு யாரும் முன்வர விரும்ப மாட்டார்கள். ஆனாலும் பிரியங்காவுக்கு சவால் விடும் விதமாக தொகுப்பாளினி மணிமேகலை அவருடைய நீண்ட நாள் ஆசையாக இருந்த குக் வித்து கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆனால் அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்ற பிரியங்கா எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து மணிமேகலை தொகுத்து வழங்குவதில் ஆயிரம் கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதனால் கடுப்பான மணிமேகலை நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுதே சண்டை போட்டு அதிலிருந்து வெளியேறி விட்டார்.

அத்துடன் விஜய் டிவி சேனலிடம் மணிமேகலை அவர் பக்கம் இருக்கும் நியாயத்தை சொல்லிய பொழுதும் விஜய் டிவி சேனல் காது கொடுத்து கேட்காமல் அவரை அலட்சியப்படுத்தி விட்டது. இதனால் உங்க சங்கார்த்தமே வேண்டாம் என்று மணிமேகலை விஜய் டிவி சேனலில் இருந்து வெளியேறி விட்டார்.

அப்படிப்பட்ட அவருக்கு தற்போது ஜீ தமிழ் சேனலில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடம் வரவேற்பு பெற்ற நடன நிகழ்ச்சி தான் டான்ஸ் ஜோடி டான்ஸ். இதனுடைய அடுத்த சீசன் விரைவில் தொடங்கப் போகிறது.

அதற்கான ஆடிஷன் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய சீக்கிரத்தில் வெளியிட போகிறார்கள். மேலும் இதுவரை இந்த நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா நடுவர்களாக இருந்து வந்தார்கள். ஆனால் தற்போது ஆரம்பிக்கப்படும் நிகழ்ச்சியில் சங்கீதாவிற்கு பதிலாக நடிகை வரலட்சுமி வரப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த மிர்ச்சி விஜய் உடன் தொகுப்பாளனி மணிமேகலை சேர்ந்து தொகுத்து வழங்கப் போகிறார். இதன் மூலம் நான் தான் பெஸ்ட் என்று விஜய் டிவியின் சொம்பு தூக்கியாக இருந்த பிரியங்காவிற்கு மணிமேகலை சரியான பதிலடி கொடுக்கும் விதமாக ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு தயாராகிவிட்டார்.

Trending News