புதன்கிழமை, ஜனவரி 1, 2025

அசோக் செல்வனை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய பிரியா பவானி சங்கர்.. நட்புக்கு செய்த துரோகம்

சமீபகாலமாக தமிழ் சினிமா இயக்குனர்கள் ரீமேக் திரைப்படங்களை இயக்குவதில் அதிக அளவு ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் ஹாஸ்டல் திரைப்படமும் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படத்தின் ரீமேக் தான்.

இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்தில் அசோக் செல்வன், சதீஷ், பிரியா பவானி சங்கர், நாசர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஆண்கள் ஹாஸ்டலுக்குள் நுழையும் ஒரு பெண்ணை சுற்றி நடக்கும் விஷயங்களை காமெடி மற்றும் ஹாரர் கலந்து இந்த படத்தில் காட்டியிருக்கின்றனர்.

முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியான இந்த திரைப்படம் மலையாளத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. வெறும் 2 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட 25 கோடி வரை வசூலித்து லாபம் பார்த்தது.

அந்த அளவுக்கு சக்கைப்போடு போட்ட இந்தப் படத்தை தமிழில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதற்கு நேர் மாறாக தற்போது ஹாஸ்டல் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மண்டை காய்ந்து போய் கதறி வருகின்றனர்.

நல்ல ரிலாக்ஸா சிரித்து படத்தை பார்க்கலாம் என்று வரும் ரசிகர்கள் இந்த படத்தின் காமெடி காட்சிகளை பார்த்து கடுப்பாகி வருகிறார்களாம். அசோக் செல்வனுக்காக இந்த படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் தற்போது மிகுந்த ஏமாற்றத்தில் இருக்கின்றனர்.

இதற்கு ஒரு வகையில் பிரியா பவானி சங்கரும் காரணமாக இருக்கிறார். எப்படி என்றால் இந்த படத்தில் நீங்கள்தான் நடிக்க வேண்டும் என்று அவர் அசோக் செல்வனிடம் தனிப்பட்ட முறையில் கேட்டிருக்கிறார். அதனால்தான் அசோக் செல்வன் இந்த படத்தில் நடிக்க வந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவரை இப்படி கூப்பிட்டு அசிங்கப்படுத்தி விட்டதாகவும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதன் ஒரிஜினல் மலையாள திரைப்படத்தை பார்த்தவர்கள் யாரும் இந்த படத்தை பார்க்க வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி தீயாக பரவி வருகிறது. இப்படி வெளிவரும் பல நெகட்டிவ் விமர்சனங்களால் இந்த படம் தற்போது மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது.

Trending News