சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ஹாஸ்டல். ஹாரர், காமெடி கலந்து இன்று வெளியாகியிருக்கும் இந்த திரைப்படம் குறித்து தற்போது ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் மலையாள திரைப்படத்தின் ரீமேக் ஆகும். மனசு விட்டு சிரிக்கலாம் என்று இந்த படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
படத்தில் ஓரளவுக்கு காமெடி காட்சிகள் வொர்க் அவுட் ஆகி இருந்தாலும் பல இடங்களில் அவை ரசிக்கும்படியாக இல்லை. இருந்தாலும் நாசர் மற்றும் முனீஷ்காந்த் கூட்டணியில் காமெடி காட்சிகள் ஓரளவுக்கு படத்தை காப்பாற்றியதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்திருப்பவர் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் இந்தப் படத்தில் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக செய்திருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இவ்வாறு ஹாஸ்டல் திரைப்படம் பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல 2 காதல் திரைப்படமும் இன்று வெளியாகி இருப்பதால், இந்த ஹாஸ்டல் திரைப்படத்திற்கு கணிசமான கூட்டமே வந்து கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

அந்த வகையில் வெறும் காமெடியை மட்டுமே நம்பி களத்தில் குதித்திருக்கும் இயக்குனர் அதை திரைக்கதையில் காட்டத் தவறி விட்டதாகவும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் கூறி வருகின்றனர். இதனால் இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனங்களை பெற தவறியுள்ளது.
