Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலுக்கான அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
மகேஷின் வாழ்க்கையில் இருந்து ஒரே நேரத்தில் ஆனந்தி மற்றும் வார்டனை துரத்தி விட பார்வதியை சிறந்த முடிவு எடுத்திருக்கிறார்.
ஆனந்தி மற்றும் மகேஷின் திருமணத்தை நடத்தி வைக்க பார்வதி சம்மதம் தெரிவிக்கிறார். இது அன்பு மற்றும் ஆனந்தி இருவருக்குமே பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.
மகேஷ் எடுக்கும் விபரீத முடிவு
இனி இரண்டு பேரும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற சந்தேகம் சீரியல் பார்க்கும் அத்தனை பேருக்குமே இருந்தது. அதற்கான பதில் தான் இந்த ப்ரோமோ.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் ஹாஸ்டல் வார்டன் மனோன்மணியை நேரில் சந்திக்கிறார்கள்.
அவரிடம் அன்பு தான் அழகன், அழகன் தான் அன்பு நாங்கள் இருவரும் காதலிக்கிறோம் என்று ஆனந்தி சொல்கிறாள். இது வார்டனுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கிறது.
அதே நேரத்தில் மகேஷ் ஆனந்தி எனக்கு கிடைப்பதற்கு நான் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என்று சொல்கிறான்.
ஒரு வேளை வார்டன் ஆனந்தி மற்றும் அன்புவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்து உதவினால் கண்டிப்பாக மகேஷ் வார்டனை கூட எதிர்த்து விடுவான். இதனால் பார்வதியின் திட்டம் கைகூட அதிக வாய்ப்பு இருக்கிறது