Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக அன்புவின் அம்மா தொலைத்த செயினை ஆனந்தி மற்றும் அன்பு மீட்டெடுத்து விடுகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் ஆனந்திக்கு அவளுடைய அண்ணன் வேலுவை பார்க்கும் வாய்ப்புும் கிடைத்துவிட்டது.
ஆனந்தியின் அப்பா அம்மாவுக்கு வேலு மீது தீராத கோபம் இருக்கிறது. ஆனால் ஆனந்தி தன் அண்ணன் பக்கம் ஏதாவது ஒரு நியாயம் இருக்கும் என்பதை நம்பிக் கொண்டு இருந்தாள்.
இன்று வெளியாகியிருக்கும் புரோமோவில் ஆனந்தி மற்றும் வேலு பேசி சமாதானமாவது போல் காட்டப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் கோகிலா கல்யாணத்திற்கு முன்பு உன்னை அப்பா அம்மா உடன் சேர்க்கிறேன் என ஆனந்தி வாக்கு கொடுக்கிறாள்.
கோகிலா கல்யாணத்தில் நடக்க போகும் பிரளயம்
அதே நேரத்தில் அன்புவின் அம்மாவுக்கு தன்னை மருத்துவமனையில் இரவு நேரத்தில் பார்த்துக் கொண்டது யாழினி கிடையாது என ஞாபகம் வருகிறது.
உடனே யாழினியை கூப்பிட்டு அன்னைக்கு ராத்திரி நீ என் கூட ஆஸ்பத்திரியில் இல்ல சரிதானே என்று கேட்கிறார்.
யாழினி எப்படியும் ஆனந்தி கூட இருந்ததை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால் அன்புவின் அம்மா கண்டிப்பாக மனம் மாறுவார்.
ஆனால் அதை எல்லாம் கெடுத்து குட்டிசுவர் ஆக்குவதற்கு வார்டன் காத்திருக்கிறார். ஆனந்தியை மகேஷ் உடன் சேர்த்து வைப்பதற்காக வார்டன் ஆனந்தியின் சொந்த ஊருக்கு செல்ல இருக்கிறார்.
ஒருவேளை அன்புவின் அம்மாவை முந்திக்கொண்டு வார்டன் ஆனந்தியின் அப்பாவிடம் பெண் கேட்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஆனந்தியின் அப்பா மகேஷுக்கு திருமணம் செய்து கொடுக்க ஒத்துக் கொள்கிறாரா, இல்லை மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.