செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

போறதுக்குள்ள ஒரு வெற்றி கொடுக்கணும், உதயநிதியின் கலகத் தலைவன் தேறுமா? அனல் பறக்கும் விமர்சனம்

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அவர் தற்போது நடித்திருக்கும் கலகத் தலைவன் திரைப்படம் இன்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் பரபரப்பான ப்ரோமோஷன் களை கட்டி வருகிறது.

உதயநிதி தன்னுடைய சொந்த தயாரிப்பில் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படம் எப்படி இருக்கிறது என்ற தங்களுடைய கருத்துக்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

kalaga-thalaivan-movie-review
kalaga-thalaivan-movie-review

Also read: அண்ணாத்த வெற்றியா? தோல்வியா? கிளறிவிட்ட உதயநிதி.. ஜெயிலர் பட மார்க்கெட்டை இறக்க செய்யும் சதி

அதில் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ரயில் நிலைய காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் அற்புதமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உதயநிதி, ஆரவ், கலையரசன் ஆகியோரின் நடிப்பு அசத்தலாக இருப்பதாகவும் ஹீரோயின் வரும் காட்சிகள் மொக்கையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

kalaga-thalaivan-movie-review
kalaga-thalaivan-movie-review

இயக்குனர் இதற்கு முன்பு இயக்கி இருந்த தடம் பட அளவுக்கு விறுவிறுப்பாக இல்லை என்றாலும் இந்த கலக தலைவன் பார்க்கும் ரகம் தான் என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் இயக்குனரின் முந்தைய ஹீரோக்களான அருண் விஜய் மற்றும் ஆர்யா இருவரும் இந்த திரைப்படத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Also read: இரண்டரை கோடியை தூக்கி கொடுத்த உதயநிதி.. கட்சிக்கு நிதி வேண்டாம் என மெய்சிலிர்க்க வைத்த கமல்

அதிலும் அருண் விஜய் உதயநிதியின் நடிப்பு, படத்தின் திரைக்கதை, நடிகர்களின் கடின உழைப்பு உள்ளிட்ட அனைத்தையும் பாராட்டி இருக்கிறார். மேலும் இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்று தனது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் இறுதி முப்பது நிமிட காட்சிகள் தவிர சில காட்சிகள் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

kalaga-thalaivan-movie-review
kalaga-thalaivan-movie-review

ஆக மொத்தம் பல வருட போராட்டத்திற்கு பிறகு வெளிவந்திருக்கும் இந்த கழகத் தலைவன் திரைப்படம் உதயநிதியின் கேரியரில் முக்கிய திரைப்படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.

Also read: முக்கிய மாவட்டங்களை சூழ்ச்சி செய்து வளைத்துப் போட்ட உதயநிதி.. வாரிசு வசூலை சுக்குநூறாக்க போகும் அஜீத்

Trending News