தமிழுக்கு முன்னாள் 8 மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அனைவரையும் கவர்ந்தவர் பேபி அனிகா. அள்ளித்தந்த வானம் படம் மூலம் தமிழில் என்ட்ரி.

அதன் பின் என்னை அறிந்தால் திரிஷா மகளாக அஜித் உடன் இணைந்து நடித்த பின் பல படங்களில் மகள் கதாபாத்திரம் தேடி வந்தது.

பாஸ்கர் ஒரு ராஸ்கல், மிருதன், விஸ்வாசம் என அனைத்து படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைத்து ஹீரோக்களின் ஆசியையும் பெற்றவர் அனிகா சுரேந்தர்.

இப்பொழுது ஹீரோயின் அந்தஸ்துக்கு உயர்ந்துவிட்டார். சமீபத்தில் அவர் வெளியிட்ட போட்டோக்கள் அனைத்தும் இளசுகளை கிரங்கடித்து, விஸ்வாசம் ஸ்வேதா பொண்ணா இது என உச்சி கொட்ட வைத்துள்ளது. அந்த அளவிற்கு அவரின் போட்டோ சூட் இணையத்தை கிரங்கடித்துள்ளது.
