செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி எப்படி?. ரஜினிய ஃபாலோ பண்ணாலும் அவர மாதிரி ஆயிட முடியாது ப்ரோ

Actor Rajini: ரஜினியின் ஜெயிலர் படம் விமர்சனத்திலும், வசூலிலும் பட்டைய கிளப்பி வருகின்றது. இந்நிலையில் என்னதான் இவரை ஃபாலோ செய்தாலும் ஒரு பொழுதும் ரஜினி ஆகிட முடியாது என கூறிவரும் பிரபலம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காண்போம்.

பல எதிர்பார்ப்புகளை உள்ளடக்கி, நெல்சன் இயக்கத்தில் கொண்டாடப்பட்டு வரும் படம் தான் ஜெயிலர். சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது போல தற்பொழுது பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் பேசி வரும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Also Read: புதுவரவான காமெடி வில்லனாக கலக்கும் மங்களம் சீனு.. ஜெயிலர் பட ப்ளாஸ்ட் மோகனுக்கு வரிசையில் நிற்கும் 4 படங்கள்

ஜெயிலர் பட ஆடியோ லான்ச்சில் ஏற்பட்ட சர்ச்சை தற்பொழுது அடங்கியுள்ள நிலையில் இவரின் பேச்சு பூதாகரமாக பார்க்கப்பட்டு வருகிறது. நான் சொன்னா வம்பு தான் வரும் பேசாம நம்ம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருப்போம் என்று கூறிய ராஜன், எல்லா விஷயங்களிலும் விஜய் ரஜினியை தான் ஃபாலோ பண்ணுகிறார் என கூறியுள்ளார்.

ரஜினி ஒரு நடிகராய் அறிமுகமாகி அதன்பின்பு கமர்சியல் ரீதியாய் படங்களை கொண்டு செல்ல, நகைச்சுவை மேற்கொண்டு வந்ததை போல தற்போது விஜய்யும் ஆரம்ப காலத்தில் எதார்த்தமான நடிகராக இருந்து அதன் பின்பு இவரைப்போல் ஃபாலோ செய்து படத்தில் நகைச்சுவை மேற்கொண்டு வருகிறார்.

Also Read: எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத 5 படங்கள்.. தனுஷ் நடிப்பில் ரகுவரனாக மாற்றிய படம்

அதைக் கொண்டே தற்பொழுது பிரபலமாக பார்க்கப்படும் விஜய், ரஜினியின் நகைச்சுவை வேண்டுமென்றால் ஃபாலோ செய்யலாம் அவரின் ஸ்டைலையும், உன்னதமான நடிப்பையும் ஃபாலோ பண்ண முடியாது. மேலும் படத்தில் அவர் மேற்கொண்ட பரிமாணங்களை ஃபாலோ செய்வது மிகவும் கடினம் எனவும் கூறினார்.

அதை தொடர்ந்து இன்றும் எண்ணற்ற தயாரிப்பாளர்களை தன் பக்கம் வைத்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. ஒரு சில தயாரிப்பாளர்களை தவிர்த்து பல தயாரிப்பாளர்களை வாழவைத்த பெருமை கொண்டவர் ரஜினி. இது போன்ற குணங்களை முறியடிக்க ஒருபோதும் முடியாது எனவும் தன் கருத்தை தெரிவித்து வருகிறார் தயாரிப்பாளர் கே ராஜன்.

Also Read: நக்கல் அடித்து மனதை காயப்படுத்தும் 5 இயக்குனர்கள்.. சக நடிகர்களை கலாய்த்து தள்ளும் மிஸ்கின்

Trending News