பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா, அஸ்வின், தம்பி ராமையா உள்ளிட்ட பலரின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் செம்பி. ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் படத்தை பார்த்த அனைவரும் பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். அதில் ட்விட்டரில் ரசிகர்கள் இப்படம் குறித்து கூறிய விமர்சனங்களை பற்றி இங்கு காண்போம்.

இதுவரை காமெடி நடிகையாக மட்டுமே பார்க்கப்பட்ட கோவை சரளா இந்த திரைப்படத்தின் மூலம் அப்படி ஒரு பிம்பத்தை உடைத்து இருக்கிறார். அந்த வகையில் ரசிகர்கள் கோவை சரளாவின் நடிப்பை பார்த்து வியந்ததோடு மட்டுமல்லாமல் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்று பாராட்டி வருகின்றனர்.
Also read: பேத்திக்காக 80 வயது கிழவியாக உருமாறிய கோவை சரளா.. செம்பி பிரிவியூ ஷோ விமர்சனம்
அவருக்கு அடுத்தபடியாக அவரின் பேத்தியாக நடித்திருக்கும் நிலாவும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து உள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவியும் என்பதில் சந்தேகமே இல்லை. இவர்களுக்கு உதவி செய்யும் வழக்கறிஞர் அஸ்வின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அந்த வகையில் புத்திசாலித்தனமான கதையை எமோஷனலாக கொடுத்துள்ள இயக்குனர் பிரபு சாலமனுக்கு இப்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மைனா, கும்கி போன்ற சிறந்த படைப்புகளை கொடுத்த அவருக்கு இந்த திரைப்படம் மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறது.

Also read: பிரபு சாலமனை வச்சு செய்த பத்திரிக்கையாளர்கள்.. செம்பி படத்தால் வந்த வினை
அதேபோன்று அழுத்தமான இந்த திரைக்கதைக்கு ஏற்றவாறு இருக்கும் இசையும் ரசிகர்களை மெய் மறக்க செய்துள்ளது. அது மட்டுமல்லாமல் கோவை சரளா பேசும் ஒவ்வொரு வசனங்களும் தெறிக்க விட்டுள்ளது. இப்படி படத்தை பார்த்த பலரும் தேசிய விருதுக்கான சிறந்த திரைப்படம் என பாராட்டி வருகின்றனர்.

ஏற்கனவே ப்ரிவ்யூ ஷோவை பார்த்த பத்திரிகையாளர்கள் அனைவரும் இயக்குனர் உட்பட படகுழுவினருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இன்று வெளியான முதல் காட்சியே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்தடுத்த காட்சிகளும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக மொத்தம் இந்த வருடத்தில் வெளிவந்த சிறந்த படைப்புகளில் செம்பியும் இணைந்துள்ளது.

Also read: மேடையில் நடந்த அவமானத்தை உடைத்தெறிந்த 40 கதை அஸ்வின்.. செம்பி படம் பார்த்து கமல் கூறிய விமர்சனம்