செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி. ஏற்கனவே இந்த படத்தின் பிரமோஷன் களை கட்டிய நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் முழு ஆதரவு கொடுத்து வருகின்றனர். குஸ்தி விளையாட்டு சம்பந்தப்பட்ட இந்த கதையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே நடக்கும் காமெடி கலாட்டா தான் இந்த படம்.

கடைசியாக விஷ்ணு விஷால் நடிப்பில் எஃப் ஐ ஆர் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து வெளியாகி இருக்கும் இந்த திரைப்படம் அவருக்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்திருக்கிறது. பக்கா எண்டர்டெயின்மென்ட் படமாக வெளியாகி இருக்கும் இந்த படத்தில் ஹீரோவை விட ஐஸ்வர்யா லட்சுமி தான் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

Also read: பிட்டு பட லெவெலுக்கு பப்ளிசிட்டிக்காக போஸ் கொடுத்த கணவன்.. வெட்கமில்லாமல் போட்டோ எடுத்த 2ம் மனைவி
அந்த வகையில் பொன்னியின் செல்வன் பூங்குழலியை போல் இந்த கதாபாத்திரமும் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்த திரைப்படம் பற்றிய தங்களுடைய கருத்துக்களை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். அதில் பலரும் கூறிய ஒரே விஷயம் விஷ்ணு விஷால் ஐஸ்வர்யா லட்சுமி இருவரின் பொருத்தம் பற்றி தான்.

திரையில் அவர்களுடைய காமெடி ரொமான்ஸ் நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது என்று ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகின்றனர். மேலும் பேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் இருக்கும் இந்த படத்தில் காமெடி எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவுக்கு எமோஷனல் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்கள் ஒரு திரைப்படத்தில் எதை எதிர்பார்த்து செல்வார்களோ அது அனைத்தையும் இந்த படம் பூர்த்தி செய்வதாகவும், ஐஸ்வர்யா லட்சுமியின் நடிப்பு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து விட்டதாகவும் கருத்துக்கள் வெளியாகி உள்ளது. அந்த அளவுக்கு இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆக மொத்தம் கட்டா குஸ்தி இந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்களில் ஒரு படமாக இடம் பிடித்துள்ளது.


Also read: ரஜினி ரூட்டை கையில் எடுத்த விஷ்ணு விஷால்.. இன்னமும் வளராமல் போனதற்கு இதுதான் காரணம்