திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

சில்க் கடித்த ஆப்பிளை ஏலம் விட்ட தயாரிப்பாளர்.. ஒரு கடிக்கு இவ்வளவு விலையா.?

விஷால் நடிப்பில் உருவான மார்க் ஆண்டனி படம் சமீபத்தில் வெளியான நிலையில் சில்க் பற்றிய பேச்சு தான் எங்கு பார்த்தாலும் நிறைந்து இருக்கிறது. அதாவது 80 முதல் 90 காலகட்டத்தில் சில்க் ஸ்மிதா மீது காதல் வயப்படாத இளைஞர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அவருடைய வசீகரமான தோற்றம் ரசிகர்களை கவர்ந்தது.

அதேபோல் இயக்குனர்களும் அவரை கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு பயன்படுத்தி வந்தனர். மேலும் பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் அதில் சில காட்சிகள் சில்க் நடித்திருந்தால் அவரது புகைப்படம் கண்டிப்பாக போஸ்டரில் இடம் பெறும். ஏனென்றால் இவருக்காகவே படத்தை பார்க்க மக்கள் திரையரங்குகளில் குவிந்தனர்.

Also Read: வேண்டா வெறுப்பா நடிச்ச விஷால், ஸ்கோர் செய்த எஸ் ஜே சூர்யா.. என்ன ப்ளூ சட்டை இப்படி சொல்லிட்டாரு

அதோடு மட்டுமல்லாமல் அப்போது சில்க் உபயோகப்படுத்திய ஒவ்வொரு பொருளின் விலையும் அதிகமாக தான் இருந்தது. இந்நிலையில் ஒரு படப்பிடிப்பின் போது சில்க் ஆப்பிளை சாப்பிட்டு கீழே விட்டெறிந்தார். அதை எடுப்பதற்காக அங்குள்ள ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு சண்டையிட்டு முந்தி அடித்துள்ளனர்.

இதை பார்த்த தயாரிப்பாளர் உடனே ஒரு யோசனை செய்திருக்கிறார். அதாவது சில்க் கடித்த பாதி ஆப்பிளை அங்கு ஏலம் விட்டு இருக்கிறார். அப்போது முழுசாக ஒரு ஆப்பிளின் விலை ரெண்டு ரூபாய்க்கு கூட போகாது. ஆனால் சில்க் கடித்ததால் கூட்டத்தில் ஒருவர் 350 ரூபாய் கொடுத்து அந்த ஆப்பிளை வாங்கி சென்றாராம்.

Also Read: அட இவங்க தான் சில்க்கின் ஜெராக்ஸ் காப்பி.. வைரலாகும் மார்க் ஆண்டனி பிரியாவின் புகைப்படங்கள்

இந்தச் செய்தியை அப்போது மிகப் பெரிய விஷயமாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் அப்போது முன்னணி நடிகைகளுக்கு இருக்கும் மவுசை விட சில்க்-க்கு தான் அதிகமாக இருந்தது. மேலும் அவர் இளமையாக இருக்கும்போது தற்கொலை செய்து உயிரிழந்ததால் இப்போதும் மக்கள் மனதில் அதே தோற்றத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அதுவும் மார்க் ஆண்டனி படத்தில் அவரை போன்ற தோற்றத்தில் உள்ள பெண்ணை இயக்குனர் கண்டுபிடித்து நடிக்க வைத்தது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக தான் இருந்தது. அதுவும் எஸ்ஜே சூர்யா மற்றும் சில்க் காம்பினேஷன் திரையரங்குகளில் கைதட்டல் பறந்தது. மேலும் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் சில்க்கின் நினைவலைகள் ரசிகர்களை விட்டு போகாது.

Also Read: மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

Trending News