புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ABC பவுடரை வீட்டில் எளிதாக பண்ணுவது எப்படி.. இனி ஹார்லிக்ஸ், பூஸ்ட்க்கு குட் பாய்

ABC powder easily at home: அந்தக் காலத்தில் எல்லாம் புரோட்டீன் பவுடர் குடிக்காம வளர்ந்திருந்தாலும் அவர்களிடம் தேவையான ஊட்டச்சத்து புரதச்சத்து என செரிமானம் ஆகக்கூடிய அனைத்து விஷயங்களும் வலிமையாக இருந்தது. காரணம் அவர்கள் எடுத்துக் கொண்ட உணவு பழக்கவழக்கங்களும், அவர்கள் இறங்கி செய்த வேலைகளும் அப்படி. ஆனால் இந்த காலத்தில் இதெல்லாம் சுத்தமாக இல்லை என்பதற்கு ஏற்ப எல்லாம் தலைமறைவாக போய்விட்டது.

அதாவது இப்போ ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்ற பவுடர்களை குடித்தால் மட்டும் தான் மூளை வளர்ச்சி தசை எலும்பு எல்லாம் வலிமை பெறுகிறது என்று திரும்புகிற இடமெல்லாம் மார்க்கெட்டிங் பண்ணி நம் மூளைக்கும் மனசுக்கும் புகுத்தி விட்டார்கள். அதை நாமும் பருகி நம்முடைய குழந்தைகளுக்கும் இது கட்டாயம் குடிக்க வேண்டும் என்று திணிக்கிறோம். அதில் இருக்கும் டேஸ்ட்டுக்கு குழந்தைகளும் அடிமையாகி விட்டார்கள்.

ஆரோக்கியமான பானம் வீட்டிலேயே எளிதாக பண்ணலாம்

ஆனால் அதைவிட வீட்டில் இருக்கும் பொருள்களை இயற்கை முறையில் வைத்து நாமே எளிதாக ரெடி பண்ணி நம்முடைய குழந்தைகளுக்கு கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில் தினமும் கட்டாயம் எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு பொருளாக ABC பவுடர் புரோட்டீன் நிறைந்த சத்துக்கள் கூடிய ஹெல்த் ட்ரிங் நடைமுறையில் தற்போது வந்து கொண்டிருக்கிறது.

தேவையான பொருட்கள்: ஆப்பிள் – கால் கிலோ, கேரட் – கால் கிலோ, பீட்ரூட் – கால் கிலோ, பாதாம் – 100 கிராம், பிஸ்தா – 100 கிராம், ஏலக்காய் – 10, நாட்டுச்சக்கரை- கால் கிலோ, வெல்லம் – கால் கிலோ.

செய்முறை: ஆப்பிள், கேரட் மற்றும் பீட்ரூட் தோள்களை நீக்கி அதை துருவி மிக்ஸி ஜாரில் பேஸ்ட் ஆக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு வாணலியில் பாதாம் பிஸ்தா மற்றும் ஏலக்காவை வறுத்து பொடியாக திரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு இரும்பு கடாயில் ஆப்பிள் கேரட் பீட்ரூட் பேஸ்ட்டை போட்டு நல்ல பதமாக வதக்க வேண்டும். அடுத்ததாக கால் கிலோ நாட்டுச்சக்கரை, கால் கிலோ வெல்லம் பவுடர் போட்டு கிளற வேண்டும்.

அதில் தண்ணீர் எல்லாம் வத்தி கெட்டி பதத்துக்கு வந்ததும் பாதாம் பிஸ்தா ஏலக்காய் பவுடரை போட்டு நன்றாக கிளற வேண்டும். பிறகு ஒரு சப்பாத்தி மாவு பதத்துக்கு வந்த பிறகு அதை நன்றாக உணர வைக்க வேண்டும். இதற்கு இடையில் அவ்வப்போது அதை கிளறி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அடுத்து கட்டி கட்டியாக வந்ததும் மிக்ஸி ஜாரில் பவுடர் போல திரித்து ஒரு காற்று போகாத பாத்திரத்தில் போட்டு வைத்து விட்டால் இரண்டு மாதத்திற்கு கெட்டுப் போகாது.

அடுத்து தினமும் காலையில் காய்ச்சின பாலில் ஒரு டம்ளர் எடுத்து அதில் ஒன்றை ஸ்பூன் ஏபிசி பவுடர் போட்டு கலக்கி மால்டாக குடித்து விடலாம். அல்லது காய்ச்சின பால் பிரிட்ஜில் வைத்து அதை குளிர வைத்து அதில் ஏபிசி பவுடரை போட்டு கூட குடிக்கலாம். இது உள்தோற்றத்துக்கு மட்டும் இல்லாமல் வெளித்தோற்றத்துக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் வலுவையும் கொடுக்கும்.

பலன்கள்: ABC ஜூஸ் தினமும் குடித்து வந்தால் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். வெள்ளை ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் உடலை சுறுசுறுப்பாகவும் மேன்மையாகவும் வைக்க உதவியாக இருக்கும். உடல் முழுவதும் ஒரே சரும நிறத்தை பராமரிக்க உதவும்.

சமீபத்தில் வந்த ஆய்வின்படி இனி ஹார்லிக்ஸ் பூஸ்ட் போன்ற பவுடர் ஆரோக்கிய பானம் என்று சொல்லக்கூடாது என HUL நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது. அதனால் இனி இதுகளை நம்பி ஏமாறுவதற்கு பதிலாக வீட்டில் சுலபமாக புரோட்டின் பவுடர்களை தயாரித்து நாமும் பகிர்ந்து குழந்தைகளுக்கும் கொடுத்து நலமுடன் வாழ்வோம்.

Trending News