புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

லிகர் படம் போல் புறக்கணிக்கப்படும் ஹிரித்திக் ரோஷனின் விக்ரம் வேதா.. பின்னால் இருக்கும் காரணம்

சமீபகாலமாக பாலிவுட்டில் பெரிய நடிகர்களின் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. அதுவும் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் அந்த படத்தை பாய்காட் செய்து விடுகிறார்கள். இதனால் படம் மிகப்பெரிய தோல்வி அடைகிறது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியான லிகர் படம் மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தை இயக்குனர் புஷ்கர் காயத்ரி ஹிந்தியில் எடுத்துள்ளனர் இப்படம் தமிழில் நல்ல வசூலை ஈட்டியது. இந்நிலையில் 175 கோடி பட்ஜெட்டில் பாலிவுட்டில் விக்ரம் வேதா படத்தை எடுத்துள்ளனர்.

Also Read :அந்த உறவுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவர்கொண்டா.. வரப்போகும் புது வம்பு

மாதவன் நடித்த விக்ரம் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கானும், விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிரித்திக் ரோஷன் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த சூழலில் இப்போது விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் படத்திற்கு இணையத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

அதாவது பாலிவுட்டில் அமீர்கான், லால் சிங் சதா படம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஹிரித்திக் ரோஷன் அமீர்கானுக்கு ஆதரவாகப் பேசி அவரது படத்தை புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். மேலும் விக்ரம் வேதா படம் தமிழில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read :வாய்க் கொழுப்பால் மாட்டிக்கொண்ட சிரஞ்சீவி.. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்ட அமீர்கான்

தென்னிந்திய படங்களை பாலிவுட்டில் ரீமேக் செய்வதால் இப்படி பழைய படங்களை ஏன் மீண்டும் திரையரங்குக்கு சென்று காசு கொடுத்து பார்க்க வேண்டும் என புறக்கணிக்கின்றனர். மேலும் தமிழ் சினிமாவில் எடுத்ததை போல அப்படியே அட்ட காப்பியடித்து உள்ளார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது.

மேலும் பாலிவுட்டில் இந்து மதத்தை அவமதிப்பதாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் பாய்காட் செய்து வரப்படுகிறது. மேலும் இதே நிலைமை விக்ரம் வேதா படத்திற்கும் நடந்துள்ளது.

Also Read :விக்ரம் வேதா போல் எதிரும் புதிருமாக நடித்த பிரபல நடிகர்கள்.. மறக்கமுடியாத 5 படங்கள்

Trending News