திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

குடும்பத்தோடு அவமானப்பட்ட தனுஷ்.. ராஜதந்திரத்துடன் பழிக்கு பழி வாங்கிய அசுரன்

தனுஷ் சினிமாவுக்கு வந்த புதிதில் இவரெல்லாம் ஹீரோவா என ரசிகர்கள் கேலி செய்தார்கள். அதையெல்லாம் மீறி தன்னுடைய கடின உழைப்பால் டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி ஹாலிவுட், பாலிவுட் என இவரது திரை பயணம் பரந்து விரிந்து கிடக்கிறது.

மேலும் சூப்பர் ஸ்டாரின் மருமகன் என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்தார். ஆனால் வெளியில் தான் இது கௌரவம் தவிர ரஜினியின் குடும்பத்தினரால் தனுஷ் மற்றும் அவரது குடும்பம் நிறைய அவமானப்பட்டு இருக்கிறதாம். அவர்கள் யாரும் தனுஷ் குடும்பத்தை மதிப்பதில்லையாம்.

Also Read : ஊருக்கு தான் நா உத்தமன்.. நண்பனின் குடும்பத்தை நடுரோட்டிற்கு கொண்டு வந்த தனுஷ்

அப்போதிலிருந்தே தனுஷின் மனதில் இதெல்லாம் நிரடலாக இருந்துள்ளது. மேலும் இதுவே சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு அடித்தளமாக இருந்துள்ளது. அதன் பிறகு தான் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இடையே மிகப்பெரிய கருத்தை வேறுபாடு ஏற்பட்ட விவாகரத்து வரை சென்றது அனைவரும் அறிந்த விஷயம் தான்.

ஆகையால் தான் குடும்பத்தோடுபட்ட அவமானங்களை மனதிலேயே வைத்திருந்த தனுஷ் இப்போது பழிக்கு பழி வாங்கியுள்ளார். அதாவது ரஜினி மற்றும் முக்கிய பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் 4 கிரவுண்ட் இடம் வாங்கி 150 கோடியில் பிரம்மாண்டம் மாளிகை தனுஷ் கட்டி உள்ளார்.

Also Read : ரஜினிக்கு சவால் விடும் அளவிற்கு வீடு கட்டிய தனுஷ்.. மொத்த மதிப்பை கேட்டு வாயை பிளக்கும் திரையுலகம்

இதில் ஒவ்வொரு விஷயமும் பார்த்து பார்த்து ஆடம்பர பங்களாவாக செதுக்கியுள்ளார். இந்த வீட்டில் தனது அம்மா, அப்பாவை முன்னிறுத்தி கௌரவித்திருந்தார். அதுமட்டுமின்றி பிரபல இயக்குனர் சுப்பிரமணிய சிவா கூறுகையில் தனுஷ் தனது தாய் மற்றும் தந்தையை சொர்க்கத்தில் வாழ வைத்துள்ளார் என்றும் அவரது வீடு கோயில் போல் இருப்பதாக கூறியிருந்தார்.

இதெல்லாம் ரஜினி குடும்பம் தங்களை அவமானப்படுத்தியதை எண்ணி அவர்களுக்கு முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்பதற்காகவும், சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக அதே போயஸ் கார்டனில் பிரம்மாண்ட மாளிகை கட்டி தனது தாய், தந்தையை தனுஷ் குடியேற்றி உள்ளார்.

Also Read : 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட தனுஷின் 5 படங்கள்.. சைக்கோவாக கைதட்டல் வாங்கிய காதல் கொண்டேன்

Trending News