ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

காப்பி அடிப்பதில் தலைவனை மிஞ்சிய எச் வினோத்.. தலைவலி தாங்காமல் தெவங்கிய ரசிகர்கள்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ஹெச் வினோத். இவர் இயக்கிய முதல் இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் இந்தப் படங்களை வைத்து தான் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு வினோத்துக்கு கிடைத்தது.

இந்நிலையில் அஜித், வினோத் கூட்டணியில் சமீபத்தில் வெளியான வலிமை படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற சண்டை காட்சிகள் மிகவும் பாராட்டும்படி இருந்ததால் அஜித்துக்கு நல்ல பெயர் கிடைத்தது. ஆனால் இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர தவறிவிட்டது.

மேலும் மெட்ரோ படத்தின் கதையை காப்பிஅடித்து தான் வினோத் வலிமை படத்தை எடுத்துள்ளார் என்று அப்போது தகவல் வெளியானது. இந்நிலையில் வலிமை படத்தின் சில காட்சிகளை ஸ்பீட் படத்தில் இருந்து காப்பி அடித்ததாக கூறப்படுகிறது.

ஸ்பீட் படத்தில் இடம்பெற்ற பைக் ஸ்டண்ட் காட்சிகளை அப்படியே வலிமை படத்தில் வைத்துள்ளார் வினோத். இந்த காட்சிகள் ஸ்பீட் படத்தில் இடம்பெற்ற போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இதை அப்படியே காப்பி அடித்து ரசிகர்களை ஏமாற்றி உள்ளார் வினோத் என அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஸ்பீட் படத்தின் பஸ் ஸ்டண்ட் காட்சிகளை தான் வினோத் காப்பியடித்தார் என்ற செய்தி இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. ஏற்கனவே இயக்குனர் அட்லீ தன் முதல் படமான ராஜா ராணி படத்தில் இருந்து மற்ற படங்களை காப்பி அடித்துதான் இவர் மற்ற படங்களை இயக்குகிறார் என்ற செய்திகள் வெளியாகியிருந்தது.

நீங்களும் இந்த வரிசையில் இப்பொழுது சேர்ந்து விட்டீர்களா என்று ரசிகர்கள் வினோத்தை படாதபாடுபடுத்தி வருகின்றனர். படம் பார்க்கும்போது ஒரு காட்சி நம்மை பிரம்மிக்க வைக்கும் போது அந்த காட்சிகளை தங்கள் படங்களில் வைக்க எல்லா இயக்குனர்களும் விரும்புவார்கள். அதேபோல் அந்த காட்சியின் மீது ஈர்க்கப்பட்டு வினோத் வலிமை படத்தில் அதை வைத்து இருப்பாரோ என்னவோ.?

Trending News