காமெடி நடிகராக இருந்து சூரி டாப் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் முன்னேறி வருகிறார். அவர் விடுதலை படம் குறித்து பேசியதை இதில் பார்க்கலாம்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக, குமரேசன் என்ற கேரக்டரில் நடித்த படம் விடுதலை 1. ஆக்சன், சஸ்பென்ஸ் என படம் எல்லோருக்கும் பிடித்தமாக அமைந்தது.
இதில் விஜய்சேதுபதி, கெளதம் மேனன், சரவண சுப்பையா, பிரகாஷ் ராஜ், ராஜிவ் மேனன், இளவரசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்பட்த்தில் இடம்பெற ஒன்னோட நடந்தா, காட்டுமல்லி ஆகிய பாடல்கள் சூப்பர் ஹிட்.
2023 ல் மார்ச் 31ல் வெளியான இப்படமும் சூப்பர் ஹிட். சூரியை ஹீரோவாக மக்கள் ஏற்றுக் கொண்டனர். அவர் நடிப்பும் பேசப்பட்டது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 உருவாகியுள்ளது. இதில், சூரி, விஜய்சேதுபதி, மஞ்சுவாரியர், கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.
விஜய்சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் உருவாகியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள வரும் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
வெற்றிமாறனை புகழ்ந்து பேசிய சூரி
விடுதலை 2 பட புரமோசன் நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டுக்கு விடுதலை புரமோசனில் கலந்துகொண்டு இப்பட அனுபவங்கள் பற்றி பேசினார் சூரி.
அதில், “விடுதலை படம் கதை கேக்க வெற்றிமாறன் சார் கிட்ட போனப்போ, எதோ நமக்கு ஒரு சின்ன ரோல் கொடுப்பாருக்கு நெனச்சு போனேன்.
ஆனா, மெயின் ரோல் கொடுப்பாருக்குன் நெனச்சு பாக்கல. அப்புறம் ஷூட்டிங் நடந்துச்சு. வெற்றிமாறன் சார் முன்னாடி நான் ஒரு ஜீரோவாக நின்றேன். என்னை அவரு செதுக்குனாரு” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.