நான்தான் “குபேரா” பட ஹீரோ.. தனுஷை வெறுப்பேற்றிய நாகார்ஜுனா

Kubera : இப்பொழுது படம் ரிலீசாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் ஒரு வழியாக படம் திரையில் வெளிவந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இயக்குனர் சேகர் கம்முலா இயக்கிய திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது ரசிகர்களுக்கிடையே நல்ல எதிர்பார்ப்பை தூண்டியது.

படத்தின் ஒரிஜினல் கதாபாத்திரங்கள்

தனுஷ் : தேவா என்ற பெயரில் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்து இதுவரை எந்த படத்திலும் நடிக்காத ஒரு வித்தியாசமான தோற்றத்தில் தனது நடிப்பை கட்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா : இவர் சமீரா என்ற கதாபாத்திரத்தில் எமோஷனலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த கதாபாத்திரம் ரசிகர்களின் ஆழ் மனதில் இடம் பிடித்திருக்கிறது.

நாகார்ஜுனா : இந்த படத்தில் நடிகர் நாகார்ஜுனா தீபக் என்ற பெயரில் முன்னாள் CBI ஆபீசராக வலம் வருகிறார். கருப்பு பணம் ஒழிப்புத் திட்டத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் பங்கு வகிக்கிறார். படம் முழுக்க இவரது பங்கு சற்று அதிகம் தான்.

கோடிக்கணக்கில் வசூல்

குபேர படம் வெளியாகி முதல் நாளிலேயே கிட்டத்தட்ட இந்திய அளவில் ₹12 கோடி வசூல் செய்தது உள்ளது. உலக அளவில் பார்க்கையில் இந்தப் படம் ₹26 கோடி வசூல் செய்துள்ளது.

பேசியது சரிதானா?

இந்நிலையில் நாகார்ஜுனா ஒரு பேட்டியில் பேசியது மிகவும் வைரலாகி வருகிறது.

“குபேரா படத்தில் நான் தான் ஹீரோவாக உணர்ந்தேன். முதலில் இருந்து கடைசி வரைக்கும் நான் நடித்த அந்த தீபக் கதாபாத்திரத்தை சுற்றி தான் படம் இருந்தது” நாகர்ஜுனாவின் இந்த பேச்சு தனுஷை ஓரங்கட்டுவதாக ரசிகர்களுக்கிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →