வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

முதல் கோணல் முற்றிலும் கோணல்.. அந்த ஒரு விஷயத்திற்கு அவமானப்பட்ட வடிவேலு, ஆனா பிரயோஜனமில்ல

நடிகர் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்குகளில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் ரிலீஸானது. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வடிவேலுவின் காமெடிகள் அவரது வயது காரணமாக செட் ஆகவில்லை என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே நாய் சேகர் திரைப்படத்தின் டைட்டிலை வாங்குவதற்கே மிகப்பெரிய போராட்டம் நடந்ததாக நடிகர் வடிவேலு அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். நாய் சேகர் என்ற கதாபாத்திரம் இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த தலைநகரம் திரைப்படத்தில், வடிவேலுவின் கதாபாத்திரத்தின் பெயர் ஆகும். இந்த நாய் சேகர் என்ற பெயரை டைட்டிலாக வைத்து படத்தை இயக்கலாம் என பல வருடங்களுக்கு முன்பே வடிவேலு பிளான் செய்திருந்தார்.

Also Read : ரீ என்ட்ரியில் மண்ணை கவ்விய வடிவேலுவின் வசூல்.. இதுக்கு ரெட் கார்டே போட்டு இருக்கலாம்

இதனிடையே இதற்கு நடுவில் இந்த வருடம் ஜனவரி 13ஆம் தேதி நடிகர் சதீஷ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்த நாய் சேகர் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் கிஷோர் இயக்கிய நிலையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்திருந்த நிலையில், ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் நாய் சேகர் படத்தின் டைட்டிலை கொடுக்குமாறு கேட்கப்பட்டதாம்

அதற்கு அந்நிறுவனம் விட்டுக்கொடுக்க முடியாது என முகத்தில் அடித்தது போல கூறி உள்ளதாம். அதன்பின் வடிவேலு, இயக்குனர் சுராஜ் உள்ளிட்டோர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகிய நிலையில் நாய் சேகர் என்றாலே வடிவேலு தானே, அவருக்கே டைட்டிலை வழங்காமல் இருப்பது சரியானது அல்ல என அவர்கள் கூறினார்களாம். அப்போது கூட அந்நிறுவனம் முடியவே முடியாது என கூறிவிட்டதாம்.

Also Read : சூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலுவை அவமானப்படுத்திய நடிகை.. ரெட் கார்டு இல்லாமலேயே காலி செய்த வைகை புயல்

இதற்கும் மேலாக உதயநிதி ஸ்டாலினின் மேனேஜர் ஃபோன் செய்து கேட்ட போதும் அவர்களிடமும் முடியவே முடியாது என தெரிவித்து விட்டார்களாம். கடைசியில் எங்களது டைட்டிலை எங்களாலே வைக்க முடியாமல் பெரும் போராட்டத்தில் இருந்தாகவும், இந்த கன்றாவியெல்லாம் கேட்கவே முடியாது எனவும் வடிவேலு உணர்ச்சிபொங்க பேசினார்.

மேலும் நாய் சேகர் டைட்டிலுக்காக யாருமே செவிசாய்க்காமல் இருந்த நிலையில் லைக்கா தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ் தன்னிடம் வந்து, கண்டிப்பாக அந்த டைட்டில் உங்களுக்குத்தான் வடிவேலு என நம்பிக்கை தெரிவித்தாராம். அதன் பின்பு தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டில் வைத்தோம் என வடிவேலு தெரிவித்தார்.

Also Read : மீண்டும் பார்க்கத் தூண்டும் சுந்தர் சி-யின் 5 சிறந்த படங்கள்.. வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரசாந்த் வடிவேலு காம்போ

- Advertisement -spot_img

Trending News