ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தோனியுடன் பேசுவதில்லை.. என்னை மதிக்கிறவங்கல தான் மதிப்பேன்- ஹர்பஜன் சிங் ஓபன் டாக்

தோனியுடன் பேசி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு தோனி இந்திய அணியின் கேப்டனாகப் பதவியேற்றார். அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங் இருந்தார்.

சீனியர் வீரர்கள் இருந்தாலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தார் தோனி. 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் இந்தியா வென்றது. இதில், ஹர்பஜன் சிங்கின் பங்கு முக்கியமானது. 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் ஹர்பஜன் சிங் சிறப்பாகச் செயல்பட்டார்.

இளம் வீரர்கள் வருகையால் அவர் ஓரங்கப்பட்டார். தோனி தலைமையில் அவர் கடைசியாக விளையாடியது 2016 ஆம் ஆண்டு.

அதன்பின், ஐபிஎல் தொடரில் சென்னை கிங்ஸ் அணியில் இருவரும் இணைந்து விளையாடினர். 2020 வரை தான் ஹர்பஜன் ஐபிஎல்-ல் இருந்தார். ஐபிஎல் -ல் இருந்து விலகிய பின் சி.எஸ்.கேயுடன் அவர் தொடர்பு கொள்ளவில்லை என தெரிகிறது.

தோனியுடனான நட்பு எப்படி? ஹர்பஜன் சிங் பதில்

அங்கிருந்த வரை தோனியை புகழ்ந்தவர், விலகிய அவரை விமர்சித்தார். சமீபத்தில் அவரிடம் தோனியுடனான நட்பு எப்படி உள்ளது எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், இருவரும் சி.எஸ்.கே அணியில் விளையாடியபோது பேசினேன் அவரிடம். இருவரும் பேசி 10 ஆண்டுகளு மேல் ஆகிவிட்டது. இதற்கு வேறெதுவும் காரணம் இல்லை என தெரிவித்துள்ளார்.

நான் அணியில் இருந்த போதே, அவரிடம் பேச முயற்சித்தது இல்லை. அவர் அறைக்கும் சென்றதில்லை. என்னை மதிப்பவர்களையே நானும் மதிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Trending News