வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்பாவோட அவஸ்தை எனக்கும் தெரியும்.. லோகேஷிடம் தளபதி விஜய் கூறிய சீக்ரெட்

Actor Vijay: கோலிவுட்டில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் விஜய் இந்த நிலைமைக்கு வருவதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை கொடுத்த சப்போர்ட் தான். முதலில் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்த விஜய் படிப்படியாக முன்னேறி இப்போது பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

இப்போது வேண்டுமானால் விஜய் மற்றும் அவருடைய தந்தை எஸ்ஏசி இருவருக்கும் இடையே நிறைய கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் தன்னுடைய தந்தை பட்ட அவஸ்தையை மனதில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் விஜய் எப்படி நடந்து கொள்வார் என்பதை லோகேஷிடம் தளபதி லியோ பட ஷூட்டிங்கில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

Also Read: தளபதி வீட்டுக்கு அருகே வீடு வாங்கிய 3 பிரபலங்கள்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

விஜய் ஒரு முறை ஒரு படத்திற்கு கதை கேட்டுவிட்டு ஓகே சொல்லி விட்டார் என்றால், அதன்பிறகு டைரக்டர் விஷயத்தில் தலையிடவே மாட்டார். ஏனென்றால் ஒரு இயக்குனரின் மகனாக அவருடைய தந்தை எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரியும். தந்தை எஸ்ஏசி ஒவ்வொரு முறையும் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய பின் மறுநாள் ஷூட்டிங் கிளம்புவதற்காக என்னென்ன முன்னேற்பாடுகள் எல்லாம் செய்வார் என்பது நன்றாக தெரியும்.

அவருக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர்களால் நேர்ந்த கசப்பான நிகழ்வுகளையும் பகிர்ந்து இருக்கிறார். நாளைக்கு ஷூட்டிங் எப்படி நடக்கும் என்பதைக் குறித்து முந்தின நாளே அவருடைய யோசனையில் அது மட்டும் தான் ஓடிக்கொண்டே இருக்கும், இதையெல்லாம் சிறு வயதில் இருந்தே நேரடியாக பார்த்து வளர்ந்தவன்.

Also Read: விஜய் தவற விட்டு ஃபீல் பண்ணிய 5 படங்கள்.. விக்ரமின் வெற்றி படத்தை ரிஜெக்ட் செய்த தளபதி

ஆகையால் தான் ஒரு படத்தின் இயக்குநரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற விஷயத்தில் மட்டும் விஜய் எப்போதுமே கரெக்டாக இருப்பாராம். இதைத்தான் ஒவ்வொரு படத்திலும் விஜய் பின்பற்றி வருகிறார் என்ற சீக்ரெட்டை இப்போது விஜய் லியோ படப்பிடிப்பில் இயக்குனர் லோகேஷிடம் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் விஜய்க்கு ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே, அந்தப் படத்தின் மீது நம்பிக்கை வந்து விட்டால் படு உற்சாகமாகி விடுவார். அதுதான் இப்போது லியோ படத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயம் இந்த ஆயுத பூஜைக்கு தரமான சம்பவம் நடப்பது உறுதி.

Also Read: உச்சகட்ட பயத்தில் நெல்சன், களத்தில் இறங்கிய தளபதி.. மாஸாக வரப்போகும் அப்டேட்

Trending News