Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

“தங்கம் வாங்க வேண்டாம் என நான் கூறினேன்.. மக்கள் பணத்தைச் சேமித்துள்ளனர்! பிரதமர் மோடி பெருமிதம்!”

“தங்கம் வாங்க வேண்டாம் என நான் கூறினேன்.. மக்கள் பணத்தைச் சேமித்துள்ளனர்! பிரதமர் மோடி பெருமிதம்!”

இந்தியாவில் தங்கம் என்பது வெறும் ஆபரணமாக மட்டும் பார்க்கப்படுவதில்லை.மக்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டிலும் தங்கம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.குறிப்பாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில்,அதன் விலை மாற்றங்கள் பொதுமக்களிடையே அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்கத் திட்டமிடுபவர்களும்,விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில்,தங்கத்தின் விலை குறைந்திருப்பது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ள கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது. தங்கம் வாங்க வேண்டாம் என்று தான் கூறியதை மக்கள் கேட்டுக்கொண்டதால்,அதன் விலை குறைந்துள்ளதாக அவர் பேசியுள்ளார்.

மேலும், மக்கள் தன்னிடம் வந்து,”நாங்கள் உங்கள் பேச்சைக் கேட்டதால் பணத்தைச் சேமித்தோம்”என்று கூறுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பொதுவாக, தங்கத்தின் விலை சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு,வட்டி விகிதங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.

இதனால்,தங்கத்தின் விலை குறைவதற்குப் பல்வேறு பொருளாதாரக் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த மே மாதம் தங்கம் வாங்குவது தொடர்பாகப் பிரதமர் மோடி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.தற்போது தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால்,அவர் அப்போது கூறிய கருத்து மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.