திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பப்ளிசிட்டிக்காக தான் ராபர்ட் மாஸ்டரை யூஸ் பண்னேன்.. உண்மையைப் போட்டு உடைத்த காதலி

பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் நன்கு தெரிந்த நிறைய முகங்கள் போட்டியளராக கலந்து கொண்டுள்ளனர். அதில் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டரை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இவரால் பிக் பாஸ் வீட்டில் பல சர்ச்சைகள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் வந்த புதிதில் ஜிபி முத்துவிடம் சில தகராறு செய்து வந்தார். தற்போது ரக்ஷிதாவை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார். இது ரக்ஷிதாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்றாலும் எப்படி சொல்வது என்ற தயக்கத்தில் உள்ளார். தற்போது ராபர்ட் மாஸ்டரை பற்றி அவரது காதலி புட்டு புட்டு வைத்துள்ளார்.

Also Read :நானா அப்படி செஞ்சேன், கதறி அழுத ஜிபி முத்து.. டிஆர்பி-காக மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்

அதாவது ராபர்ட் மாஸ்டருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வனிதா ராபர்ட் மாஸ்டர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். ஆனால் ராபர்ட் மாஸ்டர் படத்தின் மூலம் தான் வனிதாவை தெரியும் வேற எந்த தொடர்பும் இல்லை என கூறியிருந்தார்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை வனிதா ரிவ்யூ செய்து வருகிறார். இதில் ராபர்ட் மாஸ்டரை பற்றி வனிதாவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, பிரமோஷனுக்காக மட்டும் தான் ராபர்ட் மாஸ்டரை வைத்திருந்தேன். மற்றபடி எங்களுக்குள் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

Also Read :ஓவியாவிற்கு டஃப் கொடுக்கும் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்.. அறிமுகமாவதற்கு முன்பே ஆர்மியா?

மேலும் நான் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது ராபர்ட் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரை நான் கொடுமை செய்ததாக சொன்னதை என்பதை கேள்விப்பட்டேன். மேலும் அவருக்கு 2007 திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் அதன் பிறகு ஏகப்பட்ட திருமணங்களை செய்துள்ளார் என வனிதா குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி இப்போது பிக் பாஸ் வீட்டில் ரக்ஷிதாவுக்கும் ரூட் போட்டு வருகிறார் என வனிதா கூறி இருந்தார். போகப்போக வனிதா ராபர்ட் மாஸ்டரை பற்றி பல உண்மைகளை போட்டுடைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டர் பல சித்து வேலைகளை செய்து வருகிறார்.

Also Read :சாண்டி மாஸ்டருடன் இணைந்த ஜிபி முத்து.. குத்தாட்டம் போட வைத்த வீடியோ

Trending News