திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்தியாவில் முதன் முதலில் டாக்டர் படிச்சது நான் தான்.. ஹிப் ஹாப் தமிழா பெருமிதமான பேச்சு

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என பல அவதாரங்களில் வலம் வருகிறவர் தான் ஹிப் ஹாப் தமிழா. இவர் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்பு மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் நடிகராக பரிச்சயமானார். இந்த படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததை தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு போன்ற படங்களை நடிகராக நடித்து பிரபலமானார்.

பொதுவாகவே இவர் நடிக்கும் படங்களில் மூலம் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த சிவகுமாரின் சபதம் படத்தில் நெசவாளர்கள் சந்திக்கும் பிரச்சினையை மையமாக வைத்து அமைந்திருக்கும். ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை ஏற்படுத்தவில்லை. ஓரளவிற்கு தான் படம் வசூல் ஆனது.

Also read: என்னது ஹிப்ஹாப் ஆதிக்கு கல்யாணம் முடிஞ்சிட்டா.? சீக்ரெட்டாக வெளிவந்த புகைப்படம்

இதற்கு அடுத்து கடந்த வருடம் வெளிவந்த அன்பறிவு என்ற படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இப்படமும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அடுத்ததாக இவர் நடிப்பில் இரண்டு படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படங்கள் மூலம் பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்று மிக மும்பரமாக நடித்துக் கொண்டு வருகிறார்.

அடுத்ததாக இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் இவர் நடிக்கும் படங்களை பற்றியும் அது சம்பந்தப்பட்ட விளக்கங்களையும் கொடுத்து வந்தார். அதில் நடுவுல கொஞ்சம் பெரிய பிரேக் எடுத்து படிக்கப் போயிருந்தேன். அடுத்ததாக ஒரு பெரிய சந்தோஷமான விஷயத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: உருப்படியான இயக்குனருடன் கைக்கோர்த்த ஹிப் ஹாப் தமிழா ஆதி.. உச்சம் தொடுவாரா?

அதாவது பிஹெச்டி படித்து முடித்துள்ளேன். இனிமேல் என்னை டாக்டர் ஹிப் ஹாப் தமிழா என்றும் கூப்பிடலாம். மேலும் இந்தியாவில் இசைத்துறையில் நான்தான் முதன் முதலில் பிஹெச்டி பட்டத்தை வாங்கி இருக்கிறேன் மற்றும் இது சம்பந்தமான ஆராய்ச்சியும் நான் செய்யலாம் என்று மிகவும் பெருமிதமாக பேசி இருக்கிறார். அத்துடன் இந்த பட்டத்தை நான் படித்து வாங்கி இருக்கிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஏனென்றால் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி அண்ணா யுனிவர்சிட்டி பெயரை யூஸ் பண்ணி போலியான டாக்டர் பட்டத்தை வழங்கி உள்ளார்கள். அதை குறிக்கும் வகையில் ஹிப் ஹாப் தமிழா அழுத்த திருத்தமாக நான் இதை படிச்சு வாங்கினேன் என்று கெத்தாக சொல்லி இருக்கிறார். மேலும் இவர் வாங்கின டாக்டர் பட்டம் இவருக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிற்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று சொல்லலாம்.

Also read: அதிரிப்புதிரியாக வெளிவந்த பத்து தல முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

Trending News