Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

என் புருஷன் கல்யாணத்துக்கு நான் தான் சமைப்பேன்.. கெஞ்சி கூத்தாடும் பாக்யா

என் புருஷன் கல்யாணத்துக்கு நான் தான் சமைப்பேன்.. கெஞ்சி கூத்தாடும் பாக்யா

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் தற்போது கோபியின் திருமணத்தை தடுத்து நிறுத்த அவரது தந்தை மண்டபத்திற்கு வந்துள்ளார். அவரைப் பார்த்து கோபி ஆத்திரமடைந்து அநாகரீகமாக பேசுகிறார். அதுமட்டுமின்றி போயா என […]

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடரில் தற்போது கோபியின் திருமணத்தை தடுத்து நிறுத்த அவரது தந்தை மண்டபத்திற்கு வந்துள்ளார். அவரைப் பார்த்து கோபி ஆத்திரமடைந்து அநாகரீகமாக பேசுகிறார்.

அதுமட்டுமின்றி போயா என தனது தந்தையே கோபி கீழே தள்ளி விடுகிறார். இதை பார்த்த பாக்யா உச்சகட்ட கோபம் அடைகிறார். மேலும் இப்ப நீங்க உங்க அப்பாவா அவமானப்படுத்தின மாதிரி, உங்க பையன் உங்ககிட்ட நடந்திடக்கூடாதுன்னு வேண்டிக்கோங்க என்று பாக்யா கூறுகிறார்.

மேலும் இங்கு நடக்கும் பிரச்சனையால் ராதிகாவின் அண்ணன் சமையல் காண்ட்ராக்ட்ரிடம் இப்போதே பாக்யாவை மண்டபத்தில் இருந்து வெளியே போக சொல்கிறார். இதை எங்களால் சொல்ல முடியாது என ஓனரை அழைக்கிறார்.

அப்போது பாக்கியாவிடம் ஓனர் கொஞ்சம் கடுமையாக நடந்து கொள்கிறார். மேலும் ஒரு தடவை வாய்ப்பு கொடுக்குமாறு அவரிடம் பாக்யா கெஞ்சி கேட்டுக் கொண்டதால் கோபி கல்யாணத்திற்கு சமைப்பதற்கு அந்த ஓனர் அனுமதிக்கிறார்.

எப்படியோ என் புருஷன் கல்யாணத்துக்கு நான் தான் சமைப்பேன் என உறுதியாக நின்று பாக்யா இந்த ஆர்டரை கைப்பற்றியுள்ளார். மேலும் கோபியின் அப்பாவிடம் ஏன் மாமா இங்க வந்திங்க என பாக்யா கேட்கிறார்.

இந்த கோபி அவன் கல்யாணத்துக்கு அவங்க அம்மா கூப்பிட்டிருக்காம்மா, அவ மனசு உடைஞ்சி போயிட்டா என கோபியின் தந்தை கூறுகிறார். இப்ப இந்த கல்யாணத்தை நிறுத்தி என்ன மாமா பண்ண போறீங்க, இதை இத்தோட விட்டுருங்க என பாக்யா கூறுகிறார். மேலும் இந்த காண்ட்ராக்ட் எனக்கு ரொம்ப முக்கியம் என பாக்யா உறுதியாக உள்ளார்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.