Actress Kusbhoo: நடிகை குஷ்பு சினிமாவில் கொடிகட்டி பறந்ததை ஒட்டி அரசியலிலும் ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று ரொம்ப காலமாக போராடி வருகிறார். ஆனால் ஒரே கட்சியில் இல்லாமல் அவ்வப்போது வேறொரு கட்சியில் மாறிக்கொண்டே இருப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது இவரைப் பற்றி ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
ஆனால் இவர் ஒரு மேடையில் அநாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்தி குஷ்புவை தாக்கி பேசி இருக்கிறார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அவருக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதாவது இவருடைய இல்லத்தில் நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த இவர் ரொம்பவே மனவேதனையுடன் இருக்கிறேன்.
Also read: உங்க அப்பா, அம்மா திட்ட மாட்டாங்களா!. அடுத்தடுத்து ஷாக்கான புகைப்படங்களை வெளியிடும் குஷ்புவின் மகள்
நான் இப்படி இங்கே வந்து பேசுவதற்கு முக்கிய காரணம் என் மகளுக்கு நான் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஏனென்றால் உங்களைப் பற்றி இப்படி அவதூறாக பேசுகிறார் நீங்க ஏன் இவ்ளோ அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், என்று அவர்கள் என்னிடம் வந்து கேட்டால் அது முறையாக இருக்காது.
ஏனென்றால் அவர்களுக்கு நான் சொல்லிக் கொடுத்தது எந்த ஒரு இடத்திலும் தப்பு நடக்குது என்றால் அதை தட்டிக் கேட்க வேண்டும் என்று தான். அப்படி இருக்கையில் என்னைப் பற்றி ஒருவர் அவதூறாக பேசினால் அதற்கு நான் தான் வந்து நியாயம் கேட்க வேண்டும். அப்படித்தான் என் அம்மா எனக்கு சொல்லி வளர்த்திருக்கிறார்.
இதுதான் என் மகளுக்கும் நான் சொல்லிக் கொடுக்கிறேன். அத்துடன் பெண்களை அவதூறாக பேசியிருக்கிறார். மேடை நாகரிகம் என்றால் என்ன என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதை தற்போது முதலமைச்சராக உள்ள முக ஸ்டாலினும் இதை எல்லாம் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்.
மேலும் இதோட நிறுத்திக்கோங்க நானும் பதிலுக்கு ஆரம்பிச்சா உங்களால தாங்க முடியாது. உங்கள மாதிரி எனக்கு 10 பேர் தேவையில்லை நான் ஒருத்தியே போதும். அந்த தைரியம் என்னிடம் இருக்கிறது என்று கொந்தளிப்புடன் பேசி இருக்கிறார்.
தற்போது இதற்கு தீர்வு காணும் விதமாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நிரந்தர நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டார் என்பதை பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.