சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

யாரையும் அவ்வளவு சீக்கிரமா நம்ப மாட்டேன்.. அஜித்தின் இன்றைய மாற்றத்திற்கு இதுதான் காரணம்

தமிழகத்தில் தல அஜித்துக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவருடைய நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படங்களையும் அவர்கள் திருவிழா போல் கொண்டாடுவார்கள். அந்த வகையில் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் அஜித்தின் துணிவு படத்திற்காக தல ரசிகர்கள் வெறிகொண்டு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அஜித்திடம் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றம் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாக பேசிக் கொண்டிருக்கின்றனர். முன்பு ஒரு காலத்தில் அஜித் எந்த உதவி செய்தாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் அனைவருக்கும் முன்னின்று உதவி செய்வார்.

Also Read: நம்பிக்கை துரோகம், 15 வருட வாழ்க்கையை இழந்த அஜித் பட நடிகை.. ரியல் லேடி சூப்பர் ஸ்டார் நீங்க தான்

இப்போதும் உதவி செய்து வருகிறார். ஆனால் அவர் மீது பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அஜித்தை சாதாரண மனிதனுக்கு சரி, சினிமாவில் உள்ளவர்களும் சரி, அரசியலில் உள்ளவர்களும் இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் அவரை பார்க்க முடியாது.

அந்த அளவிற்கு தன்னை தானே கடவுளைப் போல் நினைத்து வாழ்ந்து வருகிறார். எடுத்துக்காட்டாக இவரிடம் பழகிய பெரிய நடிகர் ராஜ்கிரண் ஒரு படத்தில் அப்பா நடித்தார். அதிலிருந்து அஜித் அவரை உண்மையான அப்பாவாகவே பாவித்து வந்தார். இரு குடும்பங்களும் ஒன்றோடு ஒன்று பல வருடங்கள் பழகி வந்தார்கள்.

Also Read: நீங்க அனுப்புனா மட்டும் செய்தி, அதே நான் செஞ்சா.? அஜித்துக்கு மறைமுகமான மிரட்டல் விட்ட விஜய்

திடீரென ராஜ்கிரண் அஜித்திடம் உங்களை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறேன் என்று கேட்டதும், ‘இதற்காகத்தான் என்னிடம் நீங்கள் பழகினீர்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு அவரிடம் இருந்து விலகி விட்டார். இதன்பிறகு சினிமா பிரபலங்களை உறவினர்களாக பார்ப்பதில்லையாம்.

இதேபோல் அனைவரும் நம்மிடம் பழகுவதற்கு நம்மை பயன்படுத்துவதன் மட்டுமே காரணம் என்று நினைத்தால் அனைவரிடமும் இருந்து வாழ்ந்து வருகிறார். நல்ல நடிகர், நல்ல மனிதர் இப்படி மாறி வருவது ஆச்சரியமாக இருக்கிறது. இருந்தாலும் அவருக்கு ரசிகர்கள் கொடுக்கும் அன்பினை பொறுத்து அவர் இன்னும் பழைய நிலையில் மாற ஆசைப்படுகிறார்கள் தல ரசிகர்கள்.

Also Read: துணிவால் உச்சகட்ட பயத்தில் இருக்கும் வாரிசு.. படத்தை ஓட்டியே ஆகவேண்டும் என விஜய் செய்த ராஜதந்திரம்

- Advertisement -spot_img

Trending News