வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

சன் டிவி விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய சீரியல்.. ஜீ தமிழில் ஆட்ட நாயகனாக ஜொலிக்கும் ஹீரோ

Idhayam Serial: சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்ற ஒரு பெயர் இருக்கிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாக விஜய் டிவி தட்டிப் பறித்துக் கொண்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த ரெண்டு சேனல்களுக்கும் போட்டியாக ஜீ தமிழில் உள்ள சீரியல்களும் மக்கள் மனதை கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா, சந்தியாராகம், கார்த்திகை தீபம், வீரா மற்றும் இதயம் போன்ற பல சீரியல்கள் மக்களின் ஃபேவரிட் நாடகமாக மாறிவிட்டது. முக்கியமாக சமீபத்தில் வந்த இதயம் சீரியலை தொடர்ந்து மக்கள் ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம் ஹீரோவாக நடிக்கும் ஆதியின் எதார்த்தமான நடிப்பும், பாரதி மீது வைத்திருக்கும் தீராத காதலும் மக்களை கவர்ந்து விட்டது. அந்த வகையில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு பிரமோ வெளி வந்திருக்கிறது.

ரத்தினத்தின் வாரிசாக நுழைந்த ஆதி

அதாவது பாரதியும் ஆதியும் ஒன்று சேராமல் தடுப்பதற்காக பாரதியை காயப்படுத்துவதற்கு துரை கருப்பசாமி போல் சூழ்ச்சி பண்ணுகிறார். ஆனால் இதை தெரிந்து கொண்ட ஆதி மேல் உண்மையான கருப்பசாமி வந்து தத்துரூபமாக ஆட்டம் ஆடும் கோலத்தை காட்டி விடுகிறார்.

அத்துடன் தீய எண்ணத்துடன் பாரதியை நெருங்க நினைத்த துரைக்கு கருப்பசாமியாக ஆதி தண்டனை கொடுத்து விடுகிறார். இதன் மூலம் ரத்தினத்தின் வாரிசாக ஆதி நுழைந்து விடுகிறார். இதனை தொடர்ந்து பாரதி செய்த பரிகாரம் அனைத்தும் நல்லபடியாக முடிந்த நிலையில் அடுத்ததாக இவர்களுடைய கல்யாண வேலைகள் மும்மரமாக நடக்கப்போகிறது.

ஆனால் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று பல சதி வேலைகள் ஒவ்வொன்றாக வரப்போகிறது. அதையெல்லாம் முறியடித்து ஆதி பாரதியை கரம் பிடிக்க போகிறார். அத்துடன் ஆதி தான் தன்னுடைய அப்பா என்று தமிழ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டு ஒட்டுமொத்த சந்தோசத்துடன் மூன்று பேரும் வாழ போகிறார்கள்.

- Advertisement -

Trending News