சந்தியா அங்க இருந்தா சீனே வேற.. தப்பிக்க திண்டாடும் பாரதி கண்ணம்மா

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் சென்ட்ரல் மினிஸ்டரின் ஹார்ட் ஆபரேஷனை வெற்றிகரமாக முடித்தால் மட்டுமே, பாரதி பொதுமக்களையும், தன்னுடைய குடும்பத்தையும் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து காப்பாற்ற முடியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த பாரதி, கூட இருக்கும் நர்சுகள் பதட்டத்துடன் இருப்பதால் ‘பதறிய காரியம் சிதறும்’ என்பதற்கேற்ப ஆபரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதால் பதட்டம் இருக்கக் கூடாது என அறிவுரை சொல்லி அவர்களை வெளியேற்றினார்.

Also Read: பீஸ்ட் படத்தை மிஞ்சும் பாரதி கண்ணம்மா.. இது என்னடா நெல்சனுக்கு வந்த சோதனை

அதற்கு பதில் பொறுமையுடன் எல்லா விஷயத்தையும் கையாளும் கண்ணம்மாவை ஆபரேஷன் தியேட்டருக்குள் தனக்கு உதவியாக இருக்க வர வைக்கும்படி தீவிரவாதிகளிடம் பாரதி சொல்கிறார். கண்ணம்மாவும் பாரதிக்கு உதவியாக ஆப்ரேஷன் நடக்கும் இடத்திற்கு வருகிறார்.

ஏற்கனவே பாரதி, தீவிரவாதிகளுக்கு மயக்க மருந்தை செலுத்தி அவர்களை மயங்கி விழ செய்யும் பிளானில் இருக்கிறார். அந்த பிளானுக்கு கண்ணம்மாவையும் கூட்டு சேர்த்து கொண்டு தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை முறியடித்து, அவர்களிடம் இருந்து தப்பிக்க ஸ்கெட்ச் போட்டுள்ளனர்.

Also Read: வாரிசை அழிக்க திட்டம் திட்டிய குடும்பம்.. சந்தியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தீவிரவாதிகள் செல்வத்தை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஏற்கனவே செல்வம் பல இடங்களில் குண்டுவெடிப்பு வைத்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதால், அவன் வெளியே வந்தால் இன்னமும் பாதிப்புதான் அதிகம்.

அதற்காக தன் ராஜா ராணி 2 சீரியலின் சந்தியா செல்வத்தை பிடித்துக் கொடுத்தார். இப்போது மட்டும் பாரதிகண்ணம்மா-ராஜா ராணி2 சீரியலின் சங்கமம் என்றால், சந்தியா வேற லெவலுக்கு சீன் காட்டியிருப்பார். ஆனால் அவரை ஓவர் டேக் செய்யும் விதத்தில் தற்போது சீரியலில் பாரதி சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: தீவிரவாதிகளால் பதட்டத்தில் நர்சுகள்.. பல்ஸ் கூட பிடிக்கத் தெரியாத பாரதி செய்யப்போகும் ஆப்பரேஷன்