ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சின்ன வீடு இல்லனா, பெரிய வீடு இருக்கு.. பாக்யாவிடம் தஞ்சம் அடைந்த கோபி, ராதிகா எடுத்த அதிரடி முடிவு

Bhakiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி சுயநலமாக யோசித்ததால் பாக்கியா தனக்கு ஏற்றவள் இல்லை என்று நினைத்து பாக்யாவை உதாசீனப்படுத்தி ராதிகாவை தேடி கல்யாணம் பண்ணிக் கொண்டார். அப்படி ராதிகாவை கல்யாணம் பண்ணிய பிறகும் சந்தோசமாக இல்லாமல் பாக்கியாவை பழிவாங்க வேண்டும் என்று இருந்ததால் ராதிகா தொடர்ந்து அவஸ்தை பட்டு வந்தார்.

தற்போது கோபிக்கு புத்தி சொல்லும் விதமாக இனியா சில விஷயங்களை சொன்னதும் கோபி செய்த தவறுகள் அனைத்தையும் உணர்ந்துவிட்டார். உடனே நான் திருந்திட்டேன் என்று சொல்லி பாக்யா வீட்டில் தற்போது செண்டிமெண்டாக டிராமா போட்டு தங்கி கொண்டு வருகிறார். இவருக்கு துணையாக ஈஸ்வரி, செழியன் மற்றும் இனியாவும் இருக்கிறார்கள்.

இதனால் கோபியை வெளியே அனுப்ப முடியாமல் பாக்கியா அமைதியாக நின்று வேடிக்கை பார்த்து வருகிறார். ஆனால் ராதிகாவின் நிலைமை தான் ரொம்பவே பாவமாக இருக்கிறது. ஏனென்றால் கோபி வேண்டாம் என்று பாக்யாவை விட்டு போன பிறகு பாக்யாவிற்கு பக்கபலமாக ஒட்டுமொத்த குடும்பமும் இருந்து சப்போர்ட் செய்தார்கள்.

ஆனால் தற்போது ராதிகாவை விட்டு பாக்கியா கூட கோபி போனதும் ராதிகா தனிமரமாக நின்று அவஸ்தைப்படுகிறார். இவருக்கு சப்போர்ட் ஆக பேசுவதற்கு யாரும் இல்லை, கோபியும் ராதிகாவை புரிந்து கொள்ளாமல் உதாசீனப்படுத்தி விட்டார். இதனால் பொறுத்தது போதும் இனியும் அவமானப்பட தேவையில்லை என்று முடிவு பண்ணி ராதிகா வீட்டை காலி பண்ணி விட்டார்.

இதை கேள்விப்பட்ட பாக்யா, ராதிகாவை பார்த்து பேசுகிறார். நீங்கள் இந்த வீட்டை காலி பண்ண வேண்டும் என்ற எடுத்து முடிவு சரியா என்று யோசித்துப் பார்த்தீர்களா? கோபிக்கு முழுமையாக உடம்பு சரியானதும் நிச்சயம் உங்களை தேடி வருவார். அதுவரை பொறுமையாக இருங்க என்று பாக்கிய அட்வைஸ் பண்ணுகிறார்.

ஆனால் ராதிகா நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று கோபியை விட்டு போக துணிந்து விட்டார். அடுத்ததாக பாக்யாவை சந்தித்த ராதிகா, கோபி உங்களை வேண்டாம் என்று விவாகரத்து பண்ணும் பொழுது நீங்கள் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பீர்களா என்று கேட்கிறார்.

அதற்கு பாக்கியா நிச்சயமாக இல்லை, அவர் என்னை விட்டுப் போன பிறகு தான் நான் யாரென்று எனக்குத் தெரிந்தது. என்னை சுயமாக நிற்கவைக்க உதவி செய்தது என்று தன்னம்பிக்கையுடன் சொல்கிறார். இதை கேட்ட ராதிகா நான் கல்யாணம் பண்ணினதில் தான் பெரிய தவறு என்னுடைய வாழ்க்கையை முடிந்து விட்டது என்று ரொம்பவே பீல் பண்ணி கோபி வாழ்க்கையை விட்டு போக துணிந்து விட்டார்.

இதுதான் கோபிக்கு கொடுக்கும் தண்டனையாக ராதிகா நினைக்கிறார். ஆனால் கோபியை பொறுத்தவரை சின்ன வீடு இல்லை என்றால் பெரிய வீடு இருக்கும் என்று நினைப்பில் ராதிகா இல்லை என்றால் பாக்யா வீடு இருக்கு என்று தஞ்சம் அடைந்து வருகிறார்.

அட்லீஸ்ட் இனியாவது பாக்கியா, ஈஸ்வரி வாயை அடைக்கும் விதமாக அதிரடி முடிவை எடுத்து கோபியை வீட்டை விட்டு வெளியே அனுப்பினால் தான் கோபி செய்த தவறுக்கு தண்டனை கிடைக்கும் விதமாக அமையும்.

Trending News