வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

கதை கிடைக்கலைன்னா சீரியலை மூடுங்கடா எங்க உசுர வாங்காதீங்க.. மட்டமாக உருட்டும் பாக்கியலட்சுமி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியல் வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் அதுபோலத்தான் போகப் போக இந்த நாடகம் பார்ப்பவர்களை கடுப்பாக்கி கொண்டு வருகிறது. அதாவது இந்த நாடகத்தின் தற்போதைய கதை என்னவென்றால் ரெண்டு பொண்டாட்டி, ரெண்டு கணவர் என்ற விவாகரத்தில் தான் உருட்டிக் கொண்டு வருகிறார்கள்.

இதையே பார்ப்பதற்கு ரொம்ப கொடுமையாக இருக்கிறது. இதற்கு மேலேயும் இன்னும் பல விஷயங்கள் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே முடியாத அளவிற்கு இருக்கிறது. நாடகமாக இருந்தாலும் கொஞ்சமாவது லாஜிக் வேண்டுமே. அதாவது பாக்யா வேண்டாம் என்று ராதிகா பின்னாடி போனது மட்டுமல்லாமல் வீடு என்னுடைய பெயரில் இருக்கு அதனால் அதற்கு மொத்த பணத்தையும் கொடுத்துவிட வேண்டும் என்று கட்டன் ரைட்டாக பாக்கியவிடம் கேட்டு வாங்கிக் கொண்டார்.

அதன்படி பாக்யாவும் கோபியிடம் எல்லா பணத்தையும் செட்டில் பண்ணி வீட்டை விட்டு அனுப்பி விட்டார். ஆனால் தற்போது கோபிக்கு ஏதோ நெஞ்சுவலி வந்ததால் இதை பொறுக்க முடியாத இவருடைய அம்மா தன் மகனை பாக்கியா இருக்கும் வீட்டிற்கு கூட்டி வந்து விடுகிறார். போதாக்குறைக்கு ராதிகாவும் பின்னாடியே வந்து விடுகிறார்.

அதாவது கோபியிடம் ராதிகா போன் பண்ணி பேசிய போது அதை பேசவிடாமல் தடுத்துவிட்டார் பாக்யாவின் மாமியார். இதனால் கடுப்பான ராதிகா நான் வீட்டிற்கு வந்தால் கோபியுடன் தான் வருவேன் என்று பெட்டி படுக்கையை எடுத்துக்கொண்டு பாக்யா வீட்டிற்கு வந்து விடுகிறார். இதுல இப்போ எங்க லாஜிக் இருக்கிறது. அதாவது தற்போது இந்த வீடு பாக்கியாவிற்கு சொந்தமானது.

அப்படி இருக்கும்போது கோபியே இங்க வந்து இருப்பதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. சரி மாமியார் பேச்சை தட்ட முடியாததால் பாக்கியா அமைதியாக இருக்கிறார். ஆனால் ராதிகாவும் வந்து அழிச்சாட்டியம் பண்ணுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும். இதையும் அந்த வீட்டில் உள்ளவர்கள் அமைதியாக இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள். இதற்கிடையில் இந்த காட்சிகள் ஏற்கனவே ஒரு முறை வந்துவிட்டது.

இப்பொழுது மறுபடியும் இதே சீனை வைத்து ரிப்பீட் போட்டு காட்டுவது கடுப்பாக இருக்கிறது. ஒருவேளை இந்த சீனை எடுத்ததை டைரக்டர் மறந்துவிட்டாரோ என்னமோ. இதுக்கு பேசாம கோபியுடன் தான் நான் இருப்பேன் என்று அடம் பிடிக்கும் மாமியாரை வீட்டை விட்டு பாக்கியா வெளியே துரத்தி விட்டால் எல்லா பிரச்சனைக்கும் முடிவு கட்டிவிடலாம். அதை விட்டு போட்டு மட்டமான கதையை வைத்து உருட்டிக் கொண்டு வருகிறார்கள்.

Trending News