திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

Courtallam: குற்றால அருவியில் பலியான 17 வயது சிறுவன்.. சென்சார் கருவி பொருத்த ஐஐடி குழு தீவிரம்

Courtallam: குற்றால அருவிகளில் சென்சார் கருவிகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் இருக்கும் இந்த அருவியில் குளிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

கோடை காலத்தில் தான் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் இந்த வருடம் வெப்பம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. அதை தணிக்கும் பொருட்டு தற்போது அங்கங்கு மழை பெய்து வருகிறது.

அதனாலேயே குற்றால அருவிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதை தொடர்ந்து தற்போது சுற்றுலா பயணிகளின் வரவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பழைய குற்றால அருவியில் பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் நெல்லையைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பலியாகியுள்ளார்.

வெள்ளப்பெருக்கை தடுக்க சென்சார் கருவி

இதனால் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஐந்தருவி இப்போது வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் பழைய அருவி, பிரதான அருவியையும் அவர்கள் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி கனமழை, வெள்ளப்பெருக்கை தடுக்கும் வகையில் சென்சார் கருவிகளை பொருத்துவதற்கும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதில் சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையில் சில நாட்களாக ஆய்வு நடந்தது.

அதன் முடிவில் தற்போது அவர்கள் தயாரித்திருக்கும் கருவிகளை பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பல விபத்துக்கள் தடுக்கப்படும்.

Trending News