சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இக்கட்டான சூழ்நிலையில் இயக்குனரை கைவிட்ட இளையராஜா.. பின் சூப்பர் ஹிட்டான படம்

தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் விரும்பக் கூடிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டும்தான். அந்த வகையில் இவர் நம் தமிழ் சினிமாவையே தன்னுடைய மெல்லிசையால் கட்டிப்போட்ட பெருமைக்குரியவர். பல வருடங்களாக இசையமைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு இப்போதும் தனி மவுசு இருக்கிறது.

புகழ் இருக்கும் இடத்தில் சர்ச்சையும் இருக்கும் என்பதற்கு நல்ல உதாரணமும் இவர்தான். எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதே அளவுக்கு இவர் மகா கோபக்காரர். இதன் காரணமாகவே இவர் அடிக்கடி ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

இவரின் இசையில் பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. அதில் தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியான ‘அழகி’ திரைப்படமும் ஒன்று. பார்த்திபன், தேவயானி, நந்திதா தாஸ் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் தங்கர்பச்சானுக்கு ஒரு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாரான போது அதை வெளியிடுவதற்கு தங்கர்பச்சான் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். பண ரீதியாகவும் அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்துள்ளது. அந்த சமயத்தில் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.

இவ்வளவு கஷ்டப்பட்டு போராடி எடுத்த திரைப்படத்தை எப்படியாவது வெளியிட வேண்டும் என்று நினைத்த இயக்குனர் இளையராஜாவிடம் உதவி கேட்டு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு உதவ முன்வராத இளையராஜா இதெல்லாம் சினிமாவில் ரொம்ப சகஜம் அதனால் நீ உன்னுடைய ஊருக்கே போய் விடு என்று கூறி இருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன தங்கர்பச்சான் செய்வதறியாது தவித்துள்ளார். அப்போது இயக்குனரின் நண்பரான அந்த படத்தின் தயாரிப்பாளரே ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளார். ஒருவழியாக படம் ரிலீசாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. படத்தின் பாட்டுகளும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. தற்போது இந்த தகவலை தங்கர்பச்சான் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Trending News