இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட மனோபாலா உடல் நலக்குறைவால் கடந்த மே 3ம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவு திரைபிரபலங்களை மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் அவரது மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா மட்டமான இரங்கலை தெரிவித்த வீடியோ கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
ஆரம்ப காலத்தில் இளையராஜாவை பார்ப்பதற்காகவே கோடம்பாக்கம் பாலத்தை தாண்டுகிற நேரத்தில் அவருக்காக காத்திருந்த எத்தனையோ இயக்குனர்களில் மனோபாலாவும் ஒருவர் என்று கூறி இரங்கல் வீடியோவில் கூட இளையராஜா தன்னுடைய தற்பெருமையை பேசியதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் இளையராஜா சொன்னதெல்லாம் சுத்த பொய் என பிரபல தயாரிப்பாளர் கே ராஜன் பேட்டி ஒன்றில் உண்மையை உடைத்து பேசி இருக்கிறார்.
Also Read: சென்னையில் இருந்தும் மனோபாலா இறப்பிற்கு வராத 5 நடிகர்கள்.. துக்கம் விசாரிக்காத பரிதாபம்
இளையராஜா சொல்வது போல் கோடம்பாக்கம் பாலத்தின் மேலே நின்று அவருடைய வருகைக்காக காத்திருக்க வேண்டிய எந்த அவசியமும் மனோபாலாவிற்கு இல்லை. முதலில் பத்திரிக்கையாளராக இருந்த மனோபாலா, அதன் பிறகு இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, பின்னாளில் தானே சொந்தமாக இயக்குனராக நிறைய படங்களை இயக்கியவர். அப்படிப்பட்டவர் இளையராஜாவின் காருக்காக பல மணி நேரம் பாலத்தின் மேல் நின்று நேரத்தை வீணடிக்கும் அவசியமில்லை.
மேலும் மனோபாலா எந்த யூனியனிலும் போட்டி போட்டாலும் ஜெயிப்பார். காரணம் மனோபாலாவை எல்லோரும் நடுநிலையானவராகவே பார்ப்பார்கள். சிறு பட தயாரிப்பாளர்களுக்கு சொத்து மனோபாலா தான். அவர் சாதி, மத வேறுபாடு இல்லாமல் பழகக் கூடியவர். முதலில் இயக்குனராக இருந்து காலமாற்றத்தால் தன்னை ஒரு நடிகராக உயர்த்தி கொண்டவர்.
அப்படிப்பட்டவரின் மறைவின் போது அவரை இழிவுபடுத்தும் விதமாக இரங்கல் செய்தியை வெளியிட்ட இளையராஜாவின் மட்டமான புத்தி தான் அப்பட்டமாக தெரிகிறது. இது மட்டுமல்ல திரைப்பட தயாரிப்பாளர்கள் எல்லாம் சொந்த செலவு செய்து டியூன் போட சொன்னால், அந்தப் பாட்டெல்லாம் என்னோட காப்பி ரைட் என பிரச்சனையை கிளப்பி தயாரிப்பாளர்களுக்கு துரோகம் செய்வார். இப்போது ஒவ்வொருவரையும் அவர் அவமானப்படுத்துகிறார். அவர் புத்தி ஏன் இப்படி மாறிவிட்டது என தெரியவில்லை.
இளையராஜாவிடம் இருந்து வந்த ஏஆர் ரகுமான் உள்ளிட்டோர்கள் பெருமையாக நடந்து கொள்ளும் போது, இவர் மட்டும் அவருக்குள் இருக்கும் கெட்டவனை அவ்வப்போது வெளிகாட்டிக் கொண்டிருக்கிறார். மனோபாலா மட்டுமல்ல எந்த இயக்குனரும் கோடம்பாக்கம் பாலத்துல அவருக்காக காத்திருக்கவில்லை. பேரும் புகழும் தலைக்கு ஏறினால் அது தாங்காது. ஆகையால் இதோடு நிறுத்திக்கட்டும் என்று கே ராஜன் தெரிவித்துள்ளார்.
Also Read: மனோபாலா இறப்பில் முதல் ஆளாக வந்து கதறிய H. வினோத்.. இவர்களுக்குள் இப்படி ஒரு பந்தமா