சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பாடலை மட்டுமே வைத்து ஹிட்டித்த ராமராஜனின் 4 படங்கள்.. இளையராஜா வளர்த்துவிட்ட ஹீரோ

70 களின் இறுதியில் இருந்து கோலிவுடை ஆட்சி செய்தது இளையராஜாவின் இசை என்று சொல்லலாம். கமல், ரஜினி, கார்த்திக், பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் என அப்போதைய டாப் ஹீரோக்கள் படங்கள் அனைத்திற்கும் இசையமைத்தது இளையராஜா தான். இதில் நடிகர் ராமராஜன் படங்கள் ஓடியதற்கு காரணமே இளையராஜா பாடல்கள் தான்.

ராமராஜன் உதவி இயக்குனராக இருந்து, இயக்குனராக மாறி பின்பு கதாநாயகன் ஆனார். எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு படங்கள் தான் இவரை மக்களிடையே ஹீரோவாக கொண்டு சேர்ந்தது. இவரது படங்களில் 90 சதவீதத்திற்கு இளையராஜா தான் இசையமைத்து இருக்கிறார்.

Also Read: டாப் ஹீரோக்களை பயமுறுத்திய 5 நடிகர்கள்.. ரிலீஸை தள்ளி போட சொன்ன சூப்பர் ஸ்டார்

கரகாட்டக்காரன்: 1989 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கரகாட்டக்காரன் திரைப்படம் நடிகர் ராமராஜனுக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்திற்கு பிறகு கிராமப்புறங்களில் கரகாட்ட கலையும் புத்துயிர் பெற்றது என்று சொல்லலாம். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. எஸ். பி. பாலசுப்பிரமணியம் -ஜானகி குரலில் வெளியான ‘மாங்குயிலே பூங்குயிலே’ பாடல் இன்றும் இளைஞர்களால் விரும்பப்படுகிறது.

ஊரு விட்டு ஊரு வந்து: ராமராஜன் மீண்டும் கங்கை அமரன் இயக்கத்தில் நடித்த திரைப்படம் தான் ஊரு விட்டு ஊரு வந்து. இந்த படம் 1990 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. கவுண்டமணி, செந்தில், கௌதமி இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் இளையராஜா குரலில் வரும் ‘சொர்க்கமே என்றாலும்’ பாடல் ஒவ்வொரு தமிழர்களின் விருப்பப்பாடலாகவே இன்றும் உள்ளது.

Also Read: இன்று வரை நெகட்டிவ் கேரக்டரில் நடிக்காத 4 நடிகர்கள்.. பல லட்சம் கொட்டிக் கொடுத்தும் மறுத்த ஜாம்பவான்கள்

வில்லுபாட்டுக்காரன்: வில்லுபாட்டுக்காரன் 1992 ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் மற்றும் ராணி நடிப்பில் வெளியான படம். படத்தின் கதை பலவீனமாக இருந்தாலும் பாடல்கள் பெஸ்ட் என அப்போது படத்தின் விமர்சனம் இருந்தது. இந்த படத்தில் தான் வாலி ‘தந்தேன் தந்தேன்’ என்னும் பாடலை எழுதினார். இந்த பாடல் முழுக்க உதடுகள் ஒட்டாத வார்த்தைகள் எழுதப்பட்டு இருக்கும்.

பாட்டுக்கு நான் அடிமை: முழுக்க முழுக்க இளையராஜா இசையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் பாட்டுக்கு நான் அடிமை. இந்த படம் 1990 ல் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் ராமராஜன், ரேகா, குஷ்பூ ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம் பெற்றிருந்தன.

Also Read: மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

Trending News