ஆர்வக்கோளாறில் இயக்குனர் போட்ட ட்வீட்.. பதிலுக்கு வச்சு செஞ்ச இளையராஜா

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா ஏராளமான இன்னிசை பாடல்களை நமக்கு கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இவருக்கு திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். எந்த அளவுக்கு இவருக்கு புகழ் இருக்கிறதோ, அதே அளவுக்கு சர்ச்சைகளும் இருக்கிறது.

சமீபகாலமாக இவர் குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதில் லேட்டஸ்டாக இயக்குனர் சீனு ராமசாமி இளையராஜா குறித்து பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். தர்மதுரை திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது மாமனிதன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. அதில் படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி, காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய சீனு ராமசாமி இளையராஜா இந்த படத்தின் பாடல் கம்போஸிங் போது தன்னை அவருடைய அலுவலகத்திற்குள்ளே அனுமதிக்கவில்லை என்று கூறினார்.

இந்த படத்தின் இயக்குனர் நான்தான் என்று கூறியும் செக்யூரிட்டி தன்னை அனுமதிக்கவில்லை என்று அவர் கண்ணீருடன் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தில் பாடல் எழுதிய கவிஞர்கள் கூட பாடல் வரிகளை தனக்கு காண்பிக்க தயங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா இப்படி செய்வதற்கு என்ன காரணம் என்று விசாரித்துப் பார்த்தால் சீனு ராமசாமி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் இளையராஜா மற்றும் வைரமுத்து இருவரையும் சேர்த்து வைக்க போவதாக கூறியிருந்தார்.

இதுதான் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. இளையராஜா, வைரமுத்து இருவரும் நல்ல நண்பர்களாக இருந்த போதிலும் தற்போது கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கின்றனர். அது புரியாமல் சீனு ராமசாமி அப்படி கூறியது தான் இளையராஜாவை அதிகமாக கோபப்பட வைத்துள்ளதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் இளையராஜா ஒன்றும் தேவை இல்லாமல் இப்படி கோபப்படவில்லை என்றும், இயக்குநர் தான் ஆர்வக்கோளாறில் இப்படி ஒரு விஷயத்தை செய்து விட்டார் என்றும் இளையராஜாவுக்கு நெருக்கமான சிலர் கூறி வருகின்றனர்.