செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

Ilayaraja: இளையராஜாவை காண்டாக்கிய லோகேஷ்.. சன் பிக்சர்சுக்கு நோட்டீஸ் அனுப்பியது சரியா.?

Ilayaraja: கடந்த சில நாட்களாகவே இளையராஜா பற்றிய செய்தி தான் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதில் வைரமுத்து, கங்கை அமரன் மோதல் கொழுந்து விட்டு எரிகிறது.

அதேபோல் கூலி டீசரில் தன் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுவும் உச்சகட்ட பரபரப்பை உருவாக்கி உள்ளது.

இதை யாரும் எதிர்பார்க்காத நிலையில் இளையராஜாவின் கோபம் நியாயமானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் காப்புரிமை சட்டம் என்னதான் சொல்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா

1957ல் உருவாக்கப்பட்ட இந்த காப்புரிமை சட்டம் தனிநபரின் கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகளை பாதுகாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்டது. அதன்படி நாடகம், இசை, திரைப்படங்கள், இலக்கியம், இசை பதிவுகள் ஆகியவற்றின் உரிமை பாதுகாக்கப்படும்.

அவற்றை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. அதை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடியும். அதன் மூலம் நஷ்ட ஈடு பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

பொதுவாக ஒருவரின் படைப்புகளின் காப்புரிமை 60 ஆண்டுகளுக்கு செல்லுபடி ஆகும். மேலும் கலை படைப்புகள், இசை, இலக்கியம் ஆகியவை சார்ந்த காப்புரிமை அதன் உரிமையாளரின் வாழ்நாள் முழுவதும் மற்றும் இறந்த பிறகு 60 ஆண்டுகளும் செல்லுபடி ஆகும்.

காப்புரிமை சட்டம் சொல்வது என்ன

அதை வைத்து பார்க்கும் பொழுது இளையராஜாவின் இந்த காப்புரிமை வாழ்நாள் முழுவதும் உண்டு. அதனால் அவருடைய இசையை மறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் அவருடைய அனுமதியை பெற வேண்டும்.

அதன் காரணமாகவே சன் நிறுவனத்திற்கு அவர் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதில் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து இந்த செயல்களை செய்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனென்றால் விக்ரம் படத்தில் இளையராஜாவின் இசை பயன்படுத்தப்பட்டிருக்கும். அதைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டு தன் கோபத்தை காட்டியுள்ளார்.

Trending News