சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மனைவியின் இறப்பில் சொந்த ரத்தத்தையே பார்க்கவிடாமல் செய்த இளையராஜா.. நடு ரோட்டில் கதறிய பிரபலம்

Ilayaraja wife: 50 ஆண்டு காலமான திரையுலக வாழ்க்கையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இசையமைத்த பெருமைக்குரியவர் தான் இசைஞானி இளையராஜா. இவருடைய பாடல்கள் அனைத்தும் கேட்பவரின் மனதை வருடும் அளவுக்கு இருக்கும். ஆனால் இப்படிப்பட்ட கலைஞரிடம் எதற்காக இவ்வளவு மோசமான குணம் என சமீப காலமாகவே ரசிகர்களை எரிச்சல் அடைய வைக்கிறார். அதிலும் சொந்த இரத்தத்திடமே மிக மோசமாக நடந்து கொண்டிருக்கிறார்.

இளையராஜாவின் மனைவி ஜீவா கடந்த 2011ம் ஆண்டு திடீரென்று மாரடைப்பால் காலமானார். இந்த தகவலை அறிந்ததும் இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் பதறி அடித்துக் கொண்டு தன்னுடைய அண்ணியின் முகத்தை கடைசி கடைசியாக ஒருமுறை பார்த்து விடலாம் என்று ஓடோடி வந்தார்.

Also Read: இளையராஜா வரும்போது தம்மடித்த நடிகர்.. பிறவிப் பணக்காரன் என்பதால் வந்த ஆணவம்

ஏற்கனவே இளையராஜா மற்றும் கங்கை அமரன் இருவருக்கும் மனக்கசப்பு இருந்ததால், ஜீவாவின் உடலை பார்க்கக் கூடாது என சொல்லிவிட்டார். உடனே கங்கை அமரன் சிறு பிள்ளை போல் நடுரோட்டில் கதறி அழுத காட்சியை, அங்கிருந்து செய்தியாளர்கள் கேமரா மூலம் பதிவு செய்தனர்.

இந்த பிரச்சனை பெரிதாகிவிடும், கங்கை அமரனை இறுதி சடங்கில் கலந்து கொள்ள விடுங்கள் என சில மூத்த பிரபலங்கள் இளையராஜாவிடம் பேசி புரிய வைத்து, அதன் பிறகு அவரை உள்ளே விட்டனர். ஜீவா வேறு யாரும் அல்ல இளையராஜாவின் சொந்த அக்கா மகள். அதனால் அம்மாவின் கையில் அதிகம் சாப்பிட்டதை விட ஜீவா அவர்களின் கையில் தான் கங்கை அமரன் சாப்பிட்டு இருக்கிறாரார்.

Also Read: ரஜினியை கூப்பிட்டு அசிங்கப்படுத்திய இளையராஜா.. கடுப்பில் தலை குனிந்த படி காரில் சென்ற சூப்பர் ஸ்டார்

தன்னுடைய தாய் ஸ்தானத்தில் இருக்கும் அண்ணியின் முகத்தை கடைசியாக பார்க்க விடாமல் விரட்டியடிக்கப்பட்ட கங்கை அமரனின் பரிதாபமான முகம், அங்கிருந்தவர்களையே கலங்கடித்தது. இந்த தகவலை தற்போது பிரபல செய்தியாளர் செய்யாறு பாலு அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

இது சில வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு என்றாலும், இளையராஜா சமீப காலமாகவே ஓவர் திமிருடன் நடந்து கொள்வது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அவர் பிறரிடம் மட்டுமல்ல தன்னுடைய சொந்த தம்பி கங்கை அமரனிடமும் அவ்வாறே தான் நடந்து கொண்டுள்ளார் என்று இந்த நிகழ்வை உதாரணமாக கூறியிருக்கிறார்.

Also Read: AR ரகுமானுக்கு பாடியதால் பழிவாங்கிய இளையராஜா.! பகிரங்கமாக உண்மையை போட்டு உடைத்த பிரபல பாடகி

Trending News