சினிமாவில் ரஜினி, இளையராஜா இருவரின் நட்பும் எல்லோருக்குமே தெரியும். திரைத்துறையில் பல ஆண்டுகளாக இருவரும் உச்சத்தில் இருக்கின்றனர்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர அன்பும் மரியாதையும் வைத்துள்ளார். இளையராஜா, ரஜினியை பேர் சொல்லி அழைத்தாலும், அவரை சுவாமி என ரஜினி அன்புடன் அழைப்பார்.
70,80,90 களில் ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைத்தோடு சரி. அதன்பின், இசையமைப்பதில்லை. இருப்பினும் இளையராஜாவின் சென்னை ஸ்டுடியோவுக்கு ரஜினி அடிக்கடி செல்வார்.
ரஜினியுடன் செல்லச் சண்டை போட்ட இளையராஜா
சமீபத்தில் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டனர். இவர்களின் சந்திப்பு பற்றி வெளிநாட்டு தயாரிப்பாளார் சிந்தியா லூர்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “இன்று இளையராஜா சாரின் அலுவலகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தேன். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இரண்டு ஜாம்பாவான்களுடன் நான்.
இதைவிட நான் வேறெதை கேட்கப் போகின்றேன்? அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த அழகான சண்டையை ரசித்துப் பார்த்தேன். புகைப்படம் எடுக்கும் போது, ராஜா சாருக்கு மரியாதை தரும் நோக்கில், அவரை நடுவில் நிற்கச் சொன்னார் ரஜினி.
மூவரும் எங்கு நிற்பது என முடிவெடுக்கும் வரை அவர்களுக்குள் செல்ல சண்டை நடந்ததைப் பார்த்தேன். ரஜினியின் ஆசீர்வாதம் எனக்குக் கிடைத்தது” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் சிந்தியா லூர்து. இவர், பாடகியாகவும் தயாரிப்பாளராகவும் உள்ளார். இவரது தினசரி என்ற படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.