இளையராஜாவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய அனைவரும் இன்று ஒரு விரோதியை போல பார்க்கின்றனர். எல்லாத்துக்கும் காரணம் இசைஞானி தான். அவரிடம் இல்லாத சொத்துக்களே இல்லை. இப்பொழுது மேற்கொண்டு பணத்தாசை பிடித்து திரிகிறார்.
தன் பாடலை யார் பயன்படுத்தினாலும் உரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறார். மொத்த கோடம்பாக்கமும் இப்பொழுது இளையராஜா மீது வெறுப்பை காட்டுகிறது. புதிதாய் போடும் பாடல்களுக்கு மட்டுமல்லாமல். ஏற்கனவே இளையராஜா பாடலை பயன்படுத்தியவர்களுக்கும் நோட்டீஸ் பறக்கிறது.
தயாரிப்பாளர்களை கந்தல் பண்ணும் இசைஞானி
மொத்த தயாரிப்பாளர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டால் இளையராஜா ஏன் இப்படி செய்கிறார், நீங்கள் அவர் பாட்டை உங்கள் படங்களில் பயன்படுத்தினீர்களா என்று தான் கேட்டுக்கொள்கிறார்கள். அந்த அளவிற்கு இளையராஜா எல்லோருக்கும் தொந்தரவு கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் ரஜினிகாந்த் புதிதாய் நடித்து வரும் “கூலி” படத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். லோகேஷ் கனகராஜ், என் பாடலை கூலி படத்தில் பயன்படுத்தி உள்ளார் என கேட்டு பிரச்சனை செய்து வருகிறார். தொடர்ந்து என் பாடல் அவரின் மூன்று படங்களில் வருகிறது என்றும் புகார் கூறியிருக்கிறார்.
இது மட்டுமின்றி சமீபத்தில் வெளியாகி நூறு கோடிக்கு மேல் வசூல் செய்த மஞ்சு மல்பாய்ஸ் படத்தில் குணா படத்தின் பாடல் இடம்பெறுகிறது. அந்த பாடல் என் அனுமதி இல்லாமல் வைத்து விட்டார்கள் என்று அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
ஏற்கனவே மஞ்சிமல் பாய்ஸ் படக்குழு, முறையாக பிரமிட் என்னும் நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்று 75 லட்ச ரூபாய் கொடுத்து தான் இதை வாங்கியுள்ளோம் என சண்டை பிடித்து வருகிறார்கள். இளையராஜா போலவே இந்த படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்தவரும் எனக்கும் பங்கு வேண்டும் என பிரச்சனை பண்ணி வருகிறார்.
இளையராஜாவை தவறாக சித்தரிக்கும் சமூகம்
- இளையராஜா மீது தெளிக்கப்படும் கருப்பு சாயங்கள்
- கடைசி வரை சம்பளத்தை கேட்காமல் படக்குழுவை அதிரவிட்ட இளையராஜா
- இளையராஜா பாட்டையே டம்மி ஆக்கிய டி.ஆர் பாட்டு