புதன்கிழமை, ஜனவரி 15, 2025

எஸ்பிபி-காக இளையராஜா செய்த காரியம்.. பகையெல்லாம் பார்சலான தருணம்

தமிழ் சினிமாவின் இசை ஜாம்பவான் இசைஞானி இளையராஜா தன்னுடைய பாடல்கள் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கட்டிப் போட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த ராக் வித் ராஜா இசை நிகழ்ச்சியில் முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பாடியுள்ளார்.

இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் ஜனனி ஜனனி என்றும் பாடலைப் பாடி ஆரம்பித்து இளையராஜா அதன் பிறகு தன்னுடன் பணியாற்றிய பாடகர்களை பற்றி பெருமிதமாக பேசினார். அத்துடன் தன்னுடைய திரையிசை பயணத்தையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது எஸ்பிபியை பற்றி இளையராஜா நினைவுகூர்ந்தார். என்னுடைய இசை பயணத்தில் எஸ்பிபிக்கு பெரும்பங்கு உண்டு. நாங்கள் 45 ஆண்டுகளாக நண்பர்களாகியிருந்தோம். ஆந்திரா, கொல்கத்தா என எங்கு சென்றாலும் ஆர்மோனியப் பெட்டியுடன் நானும் பாலுவும் சென்ற பாடுவோம் என தனது அனுபவங்களை இளையராஜா பகிர்ந்தார்.

கொரோனாவால் பாதித்த எஸ்பிபி மறைவு தன்னை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியதாக இளையராஜா கூறினார். பின்பு எஸ்பிபிகாக அனைவரும் மௌன அஞ்சலி செலுத்துமாறு மேடையில் கூறினார். இதைக் கேட்ட அரங்கமே நிசப்தமானது. எஸ்பிபி தன்னுடைய இசைக் கச்சேரியில் பெரும்பாலும் இளையராஜா பாடல்கள்தான் பாடுவார்.

இந்நிலையில் எஸ்பிபி பல பாட்டுக்கச்சேரிகள் ஏற்பாடு செய்திருந்த நேரத்தில் இளையராஜா தன் பாடல்களை ராயல்டி இல்லாமல் பாடக் கூடாது என அனைத்து பாடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் எஸ்பிபி மிகுந்த சிக்கலை சந்தித்தார். எஸ்பிபி, இளையராஜா இடையே மனகசப்பு இருந்தது.

இந்நிலையில் எஸ்பிபியை நினைத்த இளையராஜா வருந்தியது அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியது. இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் வெளியில் எதிரிகள் என்று கூறிக்கொண்டாலும் இன்றுவரை இளையராஜா, எஸ்பிபி மேல் வைத்திருக்கும் பாசத்தை நினைத்து பாராட்டி வருகின்றனர் என கூறுகின்றனர்.

Trending News