திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இந்த 4 இசையமைப்பாளர்களை வளர விடாமல் தடுத்த இளையராஜா.. வல்லவனுக்கு வல்லவனாக வந்த இசைப்புயல்

இசைஞானி இளையராஜா எந்த அளவுக்கு இசையில் திறமையானவராக இருக்கிறாரோ அதைவிட பல மடங்கு சொந்த வாழ்க்கையில் கொஞ்சம் கர்வம் நிறைந்தவராக பார்க்கப்படுகிறார். பல மேடைகளில், பொது நிகழ்ச்சிகளில், பேட்டிகளில் மிகப்பெரிய பிரபலங்களை கூட ரொம்பவும் மட்டம் தட்டி பேசி விடுவார். இவர் ஆக்டிவாக இருந்த காலத்தில் அப்போது வளர்ந்து வந்த நான்கு இசையமைப்பாளர்களை வளர விடாமல் தடுத்து இருக்கிறார்.

சந்திர போஸ்: தேனிசைத் தென்றல் தேவாவுடன் பல கலை நிகழ்ச்சிகளில் பாடியவர் தான் சந்திரபோஸ். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையமைப்பில் அண்ணாநகர் முதல் தெரு என்னும் படத்தில் வரும் மெதுவா மெதுவா என்னும் பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இசையமைத்த இவர் தற்போது சின்னத்திரையில் நடிகராக இருக்கிறார்.

Also Read:முட்டாள், தண்டம், ஈன புத்தி எல்லாம் சேர்ந்த ஒரு கலவை தான் இளையராஜா.. மறுபடியும் சண்டைக்கு இழுக்கும் பிரபலம்

எஸ்ஏ ராஜ்குமார்: தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர் எஸ் ஏ ராஜ்குமார். இவருடைய இசையில் பூவே உனக்காக,சூரிய வம்சம், அவள் வருவாளா, நீ வருவாய் என, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற படங்களின் பாடல்கள் இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்களின் மனதுக்கு விருப்பமானதாக இருக்கிறது. இவர் சிறந்த பாடல்களுக்காக பல விருதுகளை வென்றிருக்கிறார்.

மரகதமணி: தெலுங்கு சினிமாவில் கீரவாணி என்னும் பெயரில் ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் மரகதமணி. இவர் சமீபத்தில் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கார் விருது வாங்கியவர். கீரவாணி தமிழில் அழகன், வானமே எல்லை போற்றப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

Also Read:மனோபாலாவை பற்றி இளையராஜா சொன்னதெல்லாம் சுத்த பொய்.. முகத்திரையை கிழித்த பிரபலம்

கங்கை அமரன்: என்னதான் தன்னுடைய சொந்த தம்பியாக இருந்தாலும் இசையமைப்பாளர் மற்றும் பாடல் ஆசிரியர் என பன்முக திறமை கொண்ட கங்கை அமரனை மட்டம் தட்டி தனக்கு கீழே வைத்துக் கொள்ள இளையராஜா யோசிக்கவே இல்லை. கங்கை அமரனின் இசையில் வெளியான வாழ்வே மாயம் திரைப்படத்தின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இப்படி பல ஹிட் பாடல்களை கொடுத்துக் கொண்டிருந்த இசையமைப்பாளர்களை எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் ஒழித்து விட்டார் இளையராஜா. இவருடன் போட்டி போட்டு எந்த ஒரு விளம்பரமும், மாயாஜாலமும் பண்ணாமல் தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி இன்று ஆஸ்கார் நாயகனாக வளர்ந்திருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். இவர் இசை அமைக்கவே கூடாது என பல திட்டங்களை போட்டார் இளையராஜா ஆனால் அது எதுவுமே பலிக்கவில்லை.

Also Read:இரட்டை அர்த்த வரிகளை பார்த்து முகம் சுழித்த பாடகி.. பாட முடியாதா என ரோஸ்ட் செய்த இளையராஜா

Trending News