ஒரு முறை இளையராஜா ராக் வித் ராஜா எனும் இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தினார். பொதுவாக இளையராஜாவின் இசை கச்சேரிகளுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.
அதில் இளையராஜா இசையில் உருவான பல பாடல்களை பாடகர்கள் மேடையில் பாடி அனைவரையும் மகிழ்வித்து வந்தனர். அங்கிருந்த ரசிகர்கள் அனைவரும் அந்தப் பாடல்களை கேட்டு குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
அப்போது இளையராஜா இசையில் வள்ளி திரைப்படத்தில் இடம்பெற்ற என்னுள்ளே என்னுள்ளே என்ற பாடலை மகாராஷ்டிரா பாடகி விபவரி பாடினார். ரசிகர்கள் அனைவரும் அமைதியாக உட்கார்ந்து மெய்மறந்து அந்த பாடலை கேட்டு ரசித்தனர்.
வள்ளி படத்தில் வரும் இந்த பாடலை மறைந்த பின்னணி பாடகி சொர்ணலதா பாடியிருப்பார். இப்படம் வெளிவந்த சமயத்தில் இந்தப் பாடலை ரசிக்காத ரசிகர்களே இருக்க முடியாது. மனதை மயக்கும் இந்த பாடல் இப்போது கூட பலரின் பேவரைட் பாடலாக இருக்கிறது.
அப்போது மேடையில் பாடிய இந்த பாடலை அந்த விழாவிற்கு வந்த தனுஷும் மிகவும் அமைதியாக ரசித்து கொண்டிருந்தார். அப்போது இளையராஜா தனுசை பார்த்து இந்தப் பாடல் உனக்கு பிடித்திருக்கிறதா என்று கேட்டார். அதற்கு அவரும் பிடித்திருக்கிறது என்று கூறினார்.
இந்தப் பாடலின் மகத்தான வெற்றிக்கு உன் மாமனார் தான் காரணம் என்று இளையராஜா கூறி தனுஷை கிண்டல் செய்தார். அதற்கு அவரும் சிரித்தபடியே தலையாட்டி விட்டு அமர்ந்தார். இளையராஜா ஏன் அப்படி கூறினார் என்றால் இந்த வள்ளி திரைப்படத்தின் கதையை எழுதி தயாரித்தது ரஜினிகாந்த் தான். மேலும் இப்படத்தில் அவர் ஒரு கௌரவ தோற்றத்திலும் நடித்து இருப்பார்.