புதன்கிழமை, ஜனவரி 15, 2025

உச்சத்தில் இருந்த போதே அடம்பிடித்து வாய்ப்பு கேட்ட இளையராஜா.. எம்எஸ்வி விட்டுக் கொடுத்ததால் செம ஹிட்

இளையராஜாவின் பாடல்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இரவு நேரங்களில் நெடுநீள பயணம் என்றால் உடனே இளையராஜா பாடல் தான் நினைவுக்கு வரும். ஏனென்றால் பயண கலைப்பே தெரியாது அளவுக்கு இளையராஜாவின் மெல்லிசை பாடல்கள் மனதை கவர்ந்திழுக்கும்.

இந்நிலையில் ஒரு காலகட்டத்தில் இளையராஜா உச்சத்தில் இருந்த போது தானாகவே முன்வந்து ஒரு இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டுள்ளார். பெரும்பாலானோர் இளையராஜா எதற்காகவும் தன்னை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று தான் சொல்வார்கள். அப்படிப்பட்ட அவரே அடம்பிடித்து வாய்ப்பு கேட்டுள்ளார்.

Also Read : இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தர் இறக்கிவிட்ட 2 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கர் விருது வாங்கி சாதனை

அதாவது 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் கே சங்கர். அப்போது வளர்ந்து வரும் இயக்குனராக இருந்த சங்கரின் படத்தில் இசையமைக்க வேண்டும் என்று இளையராஜா கேட்டுள்ளார். இயக்குனரோ அப்போது உச்சத்தில் இருக்கும் இளையராஜாவே தன்னுடைய படத்தில் வாய்ப்பு கேட்பதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.

ஆனால் தன்னுடைய அடுத்த படத்தில் எம்எஸ்வியை ஒப்பந்தம் செய்துள்ளதாக சொல்லிவிட்டு, ஒரு நாள் அவகாசம் கேட்டுள்ளார் இயக்குனர். இது குறித்து எம்எஸ்வி இடம் இளையராஜா தனது படத்தில் வாய்ப்பு கேட்டதாக கே சங்கர் கூறியுள்ளார். உடனே எம் எஸ் வி இந்த வாய்ப்பை இளையராஜாவுக்கே கொடுங்கள் என விட்டுக் கொடுத்துள்ளார்.

Also Read : ஆயிரக்கணக்கான பாடல்களில் இது தனித்து நிற்கும்.. மாத்தி மாத்தி புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன், இளையராஜா

அதன் பின்பு தான் கே சங்கர், இளையராஜா கூட்டணியில் முதல்முறையாக ஒரு படம் உருவானது. அதாவது 1982 ஆம் ஆண்டு சிவக்குமார், சுஜாதா, கே ஆர் விஜயா, கார்த்திக் மற்றும் பல பிரபலங்கள் நடித்த தாய் மூகாம்பிகை படம் தான் அது. கே சங்கர் பெரும்பாலும் கடவுள் படங்களை எடுக்கக் கூடியவர்.

அப்படி கடவுள் படமாக உருவான தாய் மூகாம்பிகை படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக ஜனனி ஜனனி என்ற பாடல் பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின்பு தான் இளையராஜா அடம்பிடித்து இந்த படத்தில் ஏன் வாய்ப்பு பெற்றார் என்பது தெரிய வந்தது.

Also Read : மருத்துவமனையில் இசையமைத்த இளையராஜா.. 38 வருடங்களுக்கு பின்னும் மறக்க முடியாத பாடல்

Trending News