சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கதையே கேட்காமல் மெட்டு போட்ட இளையராஜா.. பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த படம்

Ilayaraja: இசைஞானி இளையராஜா இசை உலகின் கடவுளாகவே பார்க்கப்படுகிறார். இளையராஜா மெட்டு போட்டால் படம் கண்டிப்பாக வெற்றி பெற்று விடும் என்ற நிலைமை தான் எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டங்களில் இருந்தது. இளையராஜாவின் இசையில் வரும் பாடல்களுக்காகவே திரையரங்குகளில் கூட்டம் கூடியது. அப்படிப்பட்ட இசைஞானி கதையே கேட்காமல் மெட்டு போட்ட சம்பவமும் நடந்திருக்கிறது.

பொதுவாக ஒரு படத்திற்கு மெட்டு போட வேண்டும் என்றால் படத்தின் கதையை மட்டும் இல்லாமல் ஹீரோ மற்றும் ஹீரோயின் யார் என்று கூட பார்த்து தான் போடுவார்கள். ஒவ்வொரு பாடலுக்கும், ஒவ்வொரு பின்னணி இசைக்கும் காட்சி என்ன, எதனால் அந்த பாடல் வருகிறது, எதனால் அந்த பின்னணி இசை இருக்க வேண்டும் என்று சொன்னால் தான் அதற்கேற்ற இசை வரும்.

Also Read:கரகாட்டக்காரன் பட கனகாவா இது.? வெயிட் போட்டு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன புகைப்படம்

ஆனால் இளையராஜா படத்தின் கதை என்னவென்றே கேட்காமல் டைட்டிலை மட்டும் வைத்தே மெட்டு போட்ட படம், பாடல்களுக்காக மட்டுமே ஒரு வருடம் தியேட்டரில் ஓடி வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி ஒரு அற்புதமான அதிர்ஷ்டம் கிடைத்தது அவருடைய சொந்த தம்பி கங்கை அமரனுக்கு தான். தம்பிக்காக, இளையராஜா மெனக்கெட்டு செய்திருக்கிறார் என்று அப்போது பேச்சுக்கள் கூட எழுந்தது. உண்மையில் நடந்த கதையே வேறு தான்.

கதை தெரியாமல் மெட்டு போட்ட இசைஞானி

அப்போது இளையராஜா அந்த அளவுக்கு எல்லாம் பெயர் எடுக்காமல் சாதாரண இசையமைப்பாளராக இருந்த காலம். கங்கை அமரன் தன் அண்ணனிடம் சென்று நான் ஒரு படம் இயக்கப் போகிறேன் அந்தப் படத்தின் பெயர் கரகாட்டக்காரன் என்று சொல்லி இருக்கிறார். இளையராஜா, அது என்ன பெயர் கரகாட்டக்காரன் நல்லாவே இல்ல, படம் ஓடாது என்று சொல்லி இருக்கிறார்.

அதற்கு கங்கை அமரன், அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ பாட்டை மட்டும் போட்டு கொடு என்று சொல்லி இருக்கிறார். உடனே இளையராஜா, கரகாட்டக்காரன் என்ற டைட்டிலுக்கு ஏற்றவாறு ஒன்பது பாடல்களை இசையமைத்து தன்னுடைய தம்பிக்காக கொடுத்திருக்கிறார். இசைக்கு பாடலின் வரிகள் பெரிய பக்கபலமாக அமைந்துவிட்டது.

படத்தின் ஆரம்பத்தில் இளையராஜாவின் குரலில் பாட்டாலே புத்தி சொன்னான் என்ற பாடலை மிஸ் பண்ண கூடாது என்று தியேட்டருக்கு ஓடிய ரசிகர்கள் அப்போது அதிகம். அதைத்தொடர்ந்து மாங்குயிலே பூங்குயிலே, இந்த மான் உந்தன் சொந்த மான், குடகு மலை காற்றில் வரும், ஊரு விட்டு ஊரு வந்து போன்ற பாடல்கள் இன்றுவரை இளையராஜா ஹிட்ஸில் முதலிடத்தில் இருக்கிறது.

Also Read:கரகாட்டக்காரன் கோவை சரளாவிற்கு அடுத்தபடி நீங்கதான்.. பங்கமாக கலாய்த்ததால் நொந்து நூடுல்ஸ் ஆன ராஷ்மிகா

- Advertisement -spot_img

Trending News