வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இரட்டை அர்த்த வரிகளை பார்த்து முகம் சுழித்த பாடகி.. பாட முடியாதா என ரோஸ்ட் செய்த இளையராஜா

இளையராஜா வேலை என்று வந்துவிட்டால் ரொம்பவும் கண்டிப்பானவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதனாலேயே அவருடன் இணைந்து பணிபுரிபவர்கள் எல்லா விஷயத்திலும் கவனமாக இருப்பார்கள். ஆனால் பிரபல பாடகி ஒருவர் இளையராஜாவை கோபப்படுத்திய ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது.

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் கடந்த 45 வருடங்களாக ஏராளமான பாடல்களை பாடி தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் பாடகி சித்ரா. ஏராளமான விருதுகளை பெற்றிருக்கும் இவருடைய குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

Also read: இளையராஜா உருகி உருகி காதலித்த பெண்.. வேண்டாவே வேண்டாம் என ஊரை விட்டு ஓடிய சம்பவம்

தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் இவர் பற்றி எந்த ஒரு சர்ச்சையான செய்திகளும் இதுவரை வந்தது கிடையாது. அப்படிப்பட்ட இவர் இளையராஜாவிடம் திட்டு வாங்கியது பலருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒருமுறை இவர் தேவாவின் இசையில் ஒரு பாடலை பாட சென்று இருக்கிறார். அப்போது இவருடன் எஸ் பி பாலசுப்ரமணியமும் பாட வந்திருக்கிறார்.

அப்போது பாடல் வரிகளை கேட்ட இருவரும் அதிர்ந்து போயிருக்கிறார்கள். ஏனென்றால் அந்தப் பாட்டில் பலரும் முகம் சுளிக்கும் வகையில் இரட்டை அர்த்த வரிகள் இருந்திருக்கிறது. இதனால் எஸ்பிபி இந்த பாடலை என்னால் பாட முடியாது என்று கூறி சென்றுவிட்டாராம். ஆனால் சித்ராவால் அப்படி செய்ய முடியாத நிலை இருந்திருக்கிறது.

Also read: இரண்டு மணி நேரத்தில் 7 பாடல்கள் இசையமைத்த இளையராஜா.. மொத்த பாடலும் சூப்பர் ஹிட் ஆன படம்

இருந்தாலும் அவர் தேவாவிடம் இந்த இரட்டை அர்த்த வரிகளை மட்டும் மாற்ற முடியுமா என்று தன்மையாக கேட்டிருக்கிறார். உடனே தேவாவும் அதற்கென்ன மாற்றி விடலாம் என்று கூறி நீங்கள் இப்போது செல்லுங்கள் பிறகு கூப்பிடுகிறோம் என்று அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் கடைசிவரை அவரை கூப்பிடவே இல்லையாம். அதன் பிறகு சித்ரா இளையராஜா இசையில் ஒரு பாடலை பாட சென்றபோது இது குறித்து அவர் கேட்டிருக்கிறார்.

மேலும் கவிஞர்களுக்கு எப்படி பாட்டு எழுத வேண்டும் என்று தெரியும். உன்னால் அந்த வரிகளை பாட முடியாதா, அதுதானே உன்னுடைய வேலை, இப்படி இருந்தால் நீ சினிமாவிலேயே இருக்க முடியாது என்று அவரை ரோஸ்ட் செய்திருக்கிறார். உண்மையில் அவர் மீது இருந்த அக்கறையினால் தான் இளையராஜா இவ்வளவு உரிமையோடு கோபப்பட்டு இருக்கிறார். அதை புரிந்து கொண்ட சித்ராவும் அதன் பிறகு தன்னை மாற்றிக் கொண்டாராம்.

Also read: ஓவரா ஆட்டம் போட்ட இசைஞானி இளையராஜா.. தண்ணி தெளித்து திரும்பி கூட பார்க்காத 4 மாஸ் இயக்குனர்கள்

Trending News