திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஏஆர் ரகுமானை யூஸ் பண்ணிய இளையராஜா.. காலம் கடந்தும் தெரியாமல், கிடைக்காத அங்கீகாரம்

இசையையும் இளையராஜாவையும் வேறு வேறு வச்சு பார்க்க முடியாத அளவிற்கு ஒன்றோடு ஒன்றாக பிணைந்து விட்டார். அதிலும் இவர் மெட்டு அமைத்தால் கேட்பவர்கள் சொக்கிப் போகும் அளவிற்கு பாடல்களின் இசை உயிரூட்டி இருக்கும். இவர் 1976 இல் சினிமாவிற்கு வந்திருந்தாலும் இன்றைய தலைமுறை வரைக்கும் இவரது பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இவருக்கு எந்த அளவுக்கு திறமை இருக்கிறதோ அதுக்கு மேலாகவே கர்வமும் யாரையும் மதிக்காத ஒரு குணமும் இவரிடம் ஒட்டிக்கொண்டு விட்டது. அதனால் தான் என்னமோ இவருக்கு அடிபணிந்த இயக்குனரிடம் மற்றும் பாடல் ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வந்திருக்கிறார். அதில் அத்தி பூத்தார் போல் எப்படியோ சில பாடகர்கள் மட்டும் திரையுலகில் மலர்ந்து விட்டார்கள்.

Also read: இந்த 4 இசையமைப்பாளர்களை வளர விடாமல் தடுத்த இளையராஜா.. வல்லவனுக்கு வல்லவனாக வந்த இசைப்புயல்

இவருக்கு இணையாக தற்போது இசையின் நாயகனாக இருப்பவர் தான் ஏ ஆர் ரகுமான். ஆனால் இவருடைய இசை பயணத்தை ஆரம்பித்ததே இளையராஜாவின் இசைக்குழுவில் பியானோ வாசிப்பவர் ஆகத்தான். ஏ ஆர் ரகுமான் தன்னுடைய 16 வயதில் இளையராஜாவுடன் இணைந்தார். அப்போதிலிருந்து ஆரம்பித்தது தான் இவருடைய இசைப் பயண வாழ்க்கை.

ஒரு கட்டத்திற்கு பிறகு இவருடைய திறமையை வளர்த்துக் கொண்ட இவர் தனியாக செல்லாமல் இளையராஜா உடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இளையராஜா இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஆனால் அதில் பாதி ஏ ஆர் ரகுமான் தான் டியூன் போட்டிருக்கிறார்.

Also read: என்ன ஒரு கேவலமான தற்பெருமை.. இளையராஜாவின் முகத்திரையை கிழித்த சூப்பர் ஸ்டார்

ஆனால் அந்தப் பாடல்களின் புகழ் அனைத்தையும் இளையராஜாவே பெற்றுக் கொண்டார். ஏன் இதுவரை எந்த மேடைகளிலும் ஏ ஆர் ரகுமான் இதற்கு ஒரு காரணம் என்று சொன்னது கூட கிடையாது. அந்த அளவிற்கு இளையராஜா கர்வத்துடன் இருப்பவர். ஒரு காலகட்டத்திற்கு பின் ஏ ஆர் ரகுமானின் அலாதியை திறமையால் மிகப்பெரிய இசையின் ஜாம்பவானாக ரசிகர்கள் தூக்கிக் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

அத்துடன் சக கலைஞர்கள் அனைவரும் இவரை பாராட்டும் அளவிற்கு வளர்ந்து ஆஸ்கர் நாயகன் விருதையும் பெற்று இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஏ ஆர் ரகுமான் புகழ்பெற்றிருக்கிறார். பொதுவாக எல்லா படங்களிலும் ஹீரோக்கு காதல் வந்துவிட்டால் இவருடைய பேக்ரவுண்டில் தான் அந்த இசை ஒலிக்கும். அப்படிப்பட்ட இவருடைய திறமையை இளையராஜா யூஸ் பண்ணி இருக்கிறார். இந்த உண்மை காலம் கடந்தும் வெளியில் தெரியாமல் அங்கீகாரம் கிடைக்காமல் போய்விட்டது.

Also read: தன் சாவுக்கு தானே ஒப்பாரி பாடல் பாடிய நடிகர்.. நல்ல பாட்டை வேஸ்ட் செய்த ஏ ஆர் ரகுமான்

Trending News