Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

82 வயதிலும் தென்றலாய் வீசும் இளையராஜாவின் இசை.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு

82 வயதிலும் தென்றலாய் வீசும் இளையராஜாவின் இசை.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு

Ilayaraja : இசைஞானி இளையராஜா இன்று தனது 82 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மண்மனம் மாறாத கிராமம் சார்ந்த பாடல்களில் இவரது இசை மெய்சிலிர்க்க வைக்கும். கடந்த 43 வருடங்களில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். […]

Ilayaraja : இசைஞானி இளையராஜா இன்று தனது 82 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மண்மனம் மாறாத கிராமம் சார்ந்த பாடல்களில் இவரது இசை மெய்சிலிர்க்க வைக்கும். கடந்த 43 வருடங்களில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார்.

அவர் இசையமைத்த பாடல்கள் மட்டும் கிட்டத்தட்ட 7000 திற்கு மேல் உள்ளது. இசையில் இமயம் தொட்டவர் இசைஞானி. மூன்று தலைமுறைகளை தாண்டியும் தனது குரல் மற்றும் இசையால் கட்டிப்போட்டு உள்ளார். பொதுவாகவே இளையராஜா பாடலை கேட்டுவிட்டு தான் சிலர் உறங்கவே செல்வார்கள்.

எங்கு சென்றாலும் இளையராஜாவின் இசை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலை படத்தில் கூட அவரது பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 82 வயதில் இளையராஜா சேர்த்து வைத்த சொத்து மதிப்பு பற்றி செய்தி வெளியாகி இருக்கிறது.

இளையராஜாவின் சொத்து மதிப்பு

அதாவது இளையராஜா ஒரு படத்திற்கு மூன்று கோடி வரை சம்பளம் பெற்று வருவதாக கூறப்படுகிறது. தற்போது அவரின் சொத்து மதிப்பு 150 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது. இளையராஜாவுக்கு சொந்தமாக பண்ணையபுரம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பங்களாக்கள் உள்ளது.

படங்கள் மட்டுமல்லாமல் இசைக் கச்சேரிகள் மூலமும் இளையராஜா பணம் சம்பாதித்து வருகிறார். கடந்த சில மாதங்கள் முன்பு ஆசியாவிலேயே சிம்போனி இசை நிகழ்ச்சியை கிட்டத்தட்ட 13 நாட்களில் இசையமைத்து இளையராஜா முடித்திருந்தார்.

இவ்வாறு இசையில் தன்னால் முடிந்த பல சாதனைகளை செய்து வருகிறார். மேலும் அவரது இசையமைத்த படங்களை நிறுவனங்களுக்கு காப்புரிமையும் கொடுத்திருக்கிறார். இன்னும் பல ஆண்டுகள் இளையராஜாவின் இசை காதுகளில் கேட்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் விருப்பம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.